New Trend Tamil

Browse all latest informations

Thursday, July 25, 2019

கூகிள் பற்றி தெரியாதவை !! தெரிந்துகொள்வோம் - (Unknown details about Google )

Unknown Details About Google

Image result for google



அமெரிக்காவில் கூகுள்- (Google) இன்று  தன் தலைமை இடத்தைக் கொண்டு, அனைத்து வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த நாடுகளிலும்  தன் கிளை அலுவலகங்களையும், ஆய்வு மையங்களையும் கொண்டுள்ள கூகுள் (Google) நிறுவனம், மிகப்பெரும் முதலீட்டினையும், அசைக்கமுடியாத டிஜிட்டல் (Digital) கட்டமைப்பினையும் கொண்டதாகும். முழுமையாகப் பயன்படும் வகையில் உலகின் தகவல்களை ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாகும்

கூகுள் (Google) தன் தேடுதல் சாதனத்துடன் இணைய உலகில் நுழைந்த போது, இந்த தேடல் பிரிவில் ஆல்டா விஸ்டா (AltaVista), ஹாட்பாட் (Hotbot) ஆகிய  (Searh Engine) தளங்கள் 1995 பெரிய அளவில் வளர்ந்து இருந்தன. ஆனால், இன்று கூகுள் முன்னால், இவை அனைத்தும் தங்கள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. இணையத் தேடலில் மிகத் துல்லியமான முடிவுகளையே கொண்டு வர வேண்டும் என்பதையே தன் இலக்காக, கூகுள் நிர்ணயித்துக் கொண்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளது. 



யாஹூ தவிர, இந்தப் பிரிவில் செயல்பட்டு வந்த அனைத்து தேடல் சாதன நிறுவனங்களும் கீழே விழுந்துவிட்டன என்பதே உண்மை, இதன் வளர்ச்சியைக் கண்ட மைக்ரோசாப்ட் (Microsoft), தன் பிங் (Bing) தேடல் சாதனத்தினை கூகுளுக்குப் போட்டியாக நிறுவியது.

Google Ads




பணம் சம்பாதிக்கும் வகையில், கூகுள், தன் AdWords என்ற வசதியினை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், தேடப்படும் பொருளின் இணைய தளங்கள் முகவரி அருகே, அந்த தேடல் சார்ந்த வர்த்தக நிறுவனங்கள், தங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விளம்பரங்களை மேற்கொள்ளலாம். அதிசயத்தக்க வகையில், இந்த விளம்பரங்களில் கிளிக் செய்து, பலர் விளம்பரப்படுத்தப்படும் பொருட்களை வாங்க விருப்பபட்டனர் . கூகுள் (google) மற்றும் விளம்பரம் தந்த நிறுவனம் ஆகிய இரண்டும் இதனால் பயன்பெற்றன கோடிகோடியாய் சம்பாதித்தன. இப்படியே படிப்படியாக உயர்ந்து கூகுள், உலகின் மிகப் பெரிய நிறுவனமாக உயர்ந்த நிலையை அடைந்தது. 

உலகின் அனைத்து தகவல்களும் கூகுளின் திரையெங்கும் காட்சிஅளிக்கின்றன. ஆனால், கூகுள் இதற்கும் மேலாக சிந்திக்கத் தொடங்கி இணைய சேவைகளை வழங்குகிறது

உலகில் உள்ள அனைத்து டேட்டாவினையும் தரம் பிரித்துத் தருவது பெரிதல்ல, இவற்றை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு சென்று, அதன் மூலம் மனித வாழ்வில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என கூகுள் நிறுவனர் லாரி பேஜ் தெரிவித்துள்ளார்.

Google Adsense





கடந்த பல ஆண்டுகளாக நடந்த பெரும் முயற்சிகளுக்குப் பிறகு, கூகுள் நிறுவனத்தின் Adsense ல் தமிழுக்கு அதிகாரப்பூர்வ மொழி என்ற அங்கிகாரம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு  அதாவது 2018 பிப்ரவரி 9ம் தேதியன்று, இதுகுறித்த அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இனி, ஹிந்தி, பெங்காலி, தமிழ் மூன்றும் Adsense ல் ஏற்கப்பட்ட இந்திய மொழிகள் என அங்கிகாரம்   பெற்றன.  ஆன்லைனில் (Online) பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு. ஆனால் எவ்வாறு என்று தெரிவதில்லை. கூகிள் Adsense பற்றி அறிந்தவர்கள் வெற்றி பெற்றும் இருக்கிறார்கள். 
கூகுள் என்றவுடன் நமக்கு அதன் தேடல் சாதனமான 



கூகுள் சர்ச் -(Google Search) 








 ஜிமெயில்-(Gmail)          



                           





கூகுள் மேப்ஸ் - (Google Maps)


கூகுள் அசிஸ்டன்ட்  ( Google Assistant)











 கூகுள் நிறுவனம், தற்போது ஹார்டுவேர் தயாரிப்பிலும் முழுவீச்சில் இறங்கியுள்ளது. இதற்கு முன்பு கூகுள் நிறுவனம் அளித்த வாய்ஸ் அசிஸ்டெண்ட் ஆப்பான 'கூகிள் நவ்'-வின் குறைபாடே அது இருவழி உரையாடலை மேற்கொள்ள இயலாது என்பதுதான். ஆனால் இந்த புதிய விர்ச்சுவல் அசிஸ்டெண்ட்டிடம் தொடர்ச்சியான உரையாடலை மேற்கொண்டு தகுந்த பதில்களை பெறவியலும்.
எடுத்துக்காட்டாக,
தமிழ்நாட்டில் இந்தாண்டு எப்போது பருவமழை துவங்கும்? என்று  கேட்டால்,
அதற்குரிய தகுந்த பதிலை அளிக்கும். 
இணையத்தைப் பற்றிய புள்ளிவிவரங்களை அளிக்கும் அலெக்சா டாட் காம் நிறுவனம் கூகுளின் அனைத்துலக முகப்புப் பக்கமான கூகுள் டாட் காமை உலகின் மிக அதிகமான வரவுகளைப் பெற்ற வலைத் தளமாக அடையாளப்படுத்தி உள்ளது.

கூகுள் பே  (Google Pay)





கூகுள் பே (Google Pay) என்பது கூகுள் நிறுவனம் உருவாக்கிய ஒரு  பணம் அனுப்பும் செயலி  ஆகும். செல்லிடத் தொலைபேசி , ஆண்ட்ராய்டு, கைக் கணினி போன்ற கருவிகளின் வலைத்தளம் வழியாக பணம் செலுத்தவும் மற்றும் பொருட்களை வாங்குவதற்கும் இது பயன்படுகிறது. ஜனவரி 8,2018 இல் கூகுள் நிறுவனம் அதனுடைய பழைய பணம் செலுத்தும் முறைகளான ஆண்ட்ராய் பே (Android Pay) மற்றும் கூகுள் வாலட் (Google Wallet) போன்றவற்றை ஒருங்கிணைத்து கூகுள் பே என அறிவித்தது. 

ஆண்ட்ராய்டு பே என்பது கூகுள் பே (Google Pay) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இது கூகிள் குரோமினுடைய தானாகவே நிரப்பிக் கொள்லும் வசதியையும் கொண்டுள்ளது. இந்தச் செயலியில் ஆண்ட்ராய்டு பே மற்றும் கூகுள் வாலட் போன்ற செயலிகளிலிருந்த பணம் செலுத்தும் மற்றும் பணம் பெறுவதற்கு வேண்டுதல் அனுப்புதல் ஆகிய வசதிகளும் இதில் உள்ளது.




இதன் குரோம் பிரவுசர்(Chrome Browser) இன்று தொடர்ந்து தன் பயன்பாட்டினைப் பெருக்கி வருகிறது. உலக அளவில், இன்று 80 சதவீத ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்ட், கூகுள் நிறுவனத்தினுடையதுதான். கூகுள் இணைய தொடர்பான சேவைகளை மட்டுமே கொண்டு வருகிறது என யாராவது எண்ணினால், அது அறியாமையாகும். 

ரோபோடிக்ஸ் எனப்படும் மனிதர்களைப் போல செயல்படும் ரோபோ என்னும் இயந்திரத் தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவு, உயர் கல்விப் பிரிவுகள் வழங்கல், மருத்துவத் துறையில் சோதனைகள் என்பவை எல்லாம், கூகுள் நிறுவனத்தின் ஒரு சில சேவைத் தளங்களே.  இன்னும் பல செயல்பட்டுக் கொண்டு வருகின்றன. இவை அனைத்திற்கும் பொதுவானது, இவை சார்ந்த டேட்டா வளம் மட்டுமே. 


இந்த உலகளாவிய தகவல்களுடன், எதிர்பாராமல் குவிந்த செல்வமும், கூகுள் நிறுவனத்தை உலகின் தற்போதைய வாழ்வியல் வழிகளையும் செயல் மையங்களையும் மாற்றி அமைக்கும் சக்தியை கூகுள் நிறுவனத்திற்குத் தரலாம்.

Image result for google


அவ்வாறு உருவாகும்போது, கூகுள் அவை அனைத்தினையும் கட்டுப்படுத்தி வழி நடத்தும் சக்தியோடு இயங்கலாம்.


இவ்வாறு ஒரு நிறுவனத்திடம், மனித வாழ்க்கையின் அனைத்து முக்கிய செயல்பிரிவுகளின் கட்டுப்பாட்டினைத் தரலாமா? எனப் பலர் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். 





குறிப்பாக Google Earth சிறப்பான செயல்பாடுகள் பல நன்மைகளைத் தொடர்ந்து தந்து வருகின்றன. நம் விண்வெளி குறித்து கூகுள் அவ்வப்போது அப்டேட் செய்து தரும் தகவல்கள் பல வழிகளில் பயனுள்ளதாய் இருக்கின்றன.
ஆனால், அதே சமயத்தில், ஜிமெயில் வழியாக, கூகுள் சர்ச் தளம் வழியாக, நம்மைப் பற்றிய, நாம் ஆர்வம் கொள்ளும் பொருட்கள் பற்றிய, நம் ஆசைகள், வெறுப்புகள் போன்ற அனைத்தையும் கூகுள் ஒவ்வொருவருக்குமாகத் தனித்தனியே சேமித்து வைக்கிறது. ஆனால், இப்போது கூகுள் மட்டுமின்றி, யாஹூ போன்ற தளங்களும் இதே போல நம் விருப்பு வெறுப்புகளைப் தன்னிடம் சேமித்தே வைக்கின்றன.


Image result for google server room


இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், ஐ.பி.எம். IBM நிறுவனம் மட்டுமே கம்ப்யூட்டர் சாதனத்தை கை கொண்டதாக இருக்கும் நிலை ஒன்று ஏற்பட்டது. பல்வேறு முயற்சியினால் லேப்டாப் - (Laptop ), டேப்ளட்- (Tablet) எனப் பலவகை கம்ப்யூட்டர்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

அதே போல, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், மைக்ரோசாப்ட் மட்டுமே தன்னாட்சி புரியும் நிலை ஏற்பட்டது. பல்வேறு முயற்சியினால் லினக்ஸ் மற்றும் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் நமக்குக் கிடைத்துள்ளன


Image result for google office interior




இன்றைய பொறாமை கலந்த போட்டி, டேட்டாவினைக் கைப்பற்றுவதில் உள்ளது. ஒரே ஒரு நிறுவனம், அனைத்து டேட்டாவினையும், அறிவு சார் தகவல்களையும், நூல்களையும் தன்னிடத்தே வைத்துக் கொள்ள அனுமதிக்கலாமா? இது போல டேட்டாவினை எடுத்து தன்னகத்தே ஒரு நிறுவனம் வைப்பதனை, அரசுகள் தடுக்க, கண்டிக்க அல்லது வரையறை செய்திட வேண்டாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


Image result for google headquarters\



இந்தக் கேள்விக்கான பதிலை விரைவில் அனைத்து நாடுகளும் சேர்ந்து எடுக்க வேண்டிய நிலை உருவாகி வருகிறது. இல்லை என்றால், இப்போது கூகுள் உருவாக்கி வரும் வளமான, திடமான டிஜிட்டல் கட்டமைப்பும், அதனிடம் தொடர்ந்து குவியும் செல்வமும், அந்நிறுவனத்தை எந்த அரசும் தட்டிக் கேட்க முடியாத இடத்திற்குக் கொண்டு சென்றுவிடும்.


இதுதான்  இன்றைய கூகுளின் வளர்ந்த நிலை...