Amazing Place of Wayanad,Kerala
கேரளாவில் கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் இருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு கடந்த 1980ம் ஆண்டு வயநாடு மாவட்டம் உருவாக்கப்பட்டது. கல்பெற்றா, மானந்தவாடி, சுல்தான் பத்தேரி, வைத்திரி ஆகிய இடங்கள் முக்கியமானவையாகும். இங்கு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் நிறைய உள்ளன.
கேரளாவில் வற்றாத அழகு கொட்டிக் கிடக்கும் மாவட்டம் வயநாடு. இந்த மாவட்டத்தின் முக்கால்வாசி இடம் வனப்பகுதி என்பதால் இங்கு எங்கு திரும்பினாலும் பச்சைப் பசேல்தான். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 700 முதல் 2,100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வயநாடு, தமிழக மற்றும் கர்நாடக மாநில சுற்றுலாத் தலங்களான ஊட்டி மற்றும் மைசூர் அருகே அமைந்துள்ளது இன்னொரு சிறப்பு. இயற்கை ஆட்சி செய்யும் வனப்பு மிக்க வயநாடுதான்
குருவா தீவு : (Kuruvadweep)
முத்தங்கா வனவிலங்கு சரணாலயம்:
( Muthanga wildlife sanctuary, wayanad)
இவை தவிர அம்புக்குத்தி மலையடிவாரத்தில் உள்ள முனியறா, வயநாடு ஹெரிடேஜ் மியூசியம், கொட்டமுண்டா கிளாஸ் டெம்பிள், கோரோம் மசூதி, திருநெல்லி கோவில், பழசிராஜா டாம்ப் உள்ளிட்ட பார்க்கத் தகுந்த பல இடங்கள் உள்ளன.
செம்ப்ரா உச்சி: ( Chembra Peak)
கல்பெற்றாவில் இருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது செம்ப்ரா உச்சி என்ற செம்ப்ராமலை முகடு. கடல் மட்டத்தில் இருந்து 2100 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த மலை உச்சிதான் வயநாட்டின் உயரமான மலை உச்சி ஆகும். மலை ஏற்றத்துக்கு சிறந்த இடம்.
கரலாட் ஏரி : (Karalad Lake)
வயநாடு (Adventure Camp) சாகச முகாம் கரலாட் ஏரி வயநாட்டின் தாரியோடில் அமைந்துள்ளது. இது கேரளாவின் மூன்றாவது பெரிய நன்னீர் ஏரியாகவும், பூக்கோடு ஏரிக்குப் பிறகு வயநாட்டின் இரண்டாவது பெரிய ஏரியாகவும் உள்ளது. இந்த ஏரி பனசுரா சாகர் அணையில் இருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளது.
கரலாட் ஏரி கல்பெற்றாவில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. அழகிய சோலைகளால் அலங்கரிக்கப்பட்ட கரலாட் ஏரியில் படகுச் சவாரி நடத்தப்படுகிறது. இந்த ஏரியில் தூண்டில் போட்டு மீன்பிடித்தும் பொழுது போக்கலாம்.
சூச்சிபாரா நீர்வீழ்ச்சி: (Soochipara Waterfalls)
100 அடி முதல் 300 அடி உயரத்தில் இருந்து வரிசைத் தொடராக கொட்டிக் கொண்டிருக்கும் அருவிகள், கண்களைக் கொள்ளை கொள்ளும். அருவியின் தடாகத்தில் நீந்தி மகிழலாம். இதே போல மேப்பாடிக்கு அருகே வெள்ளரிமலா கிராமத்தில் அமைந்துள்ள சென்டினல் ராக் அருவியும் பிரபலமானது. வயநாட்டுக்கு அருவிகளும் அழகு சேர்த்துக் கொண்டிருக்கின்றன. மேப்பாடிக்கு அருகே உள்ள சிப்பாரா அருவி காண்போரை பரவசப்படுத்துவதோடு ஆச்சரியப்படுத்தவும் வைக்கிறது.
பேகுர் வனவிலங்கு சரணாலயம் : (Begur Wildlife Sanctuary)
பேகுர் வனவிலங்கு சரணாலயம் வயநாடு மாவட்டத்தின் பல மறைக்கப்பட்ட ரத்தினங்களில் ஒன்றாகும். பசுமையான மற்றும் அரிதான விலங்கின இனங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாக அமைகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைகள் இங்கே ஒரு அற்புதமான சஃபாரிக்கு சரியான பின்னணியை உருவாக்குகின்றன. கரடி, காட்டெருமை, யானைகள், காட்டில் பூனைகள், குரங்குகள், சிறுத்தை, புள்ளிகள் கொண்ட மான், காட்டுப்பன்றிகள் மற்றும் காட்டு நாய்களின் பொதிகளை இங்கு காணலாம். வயநாட்டில் உள்ள மனந்தாவடிக்கு கிழக்கே 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த பகுதியில் இயற்கை ஆர்வலர்கள் பல அழகிய சுற்றுலா இடங்களைக் காணலாம். இது ஒரு தனித்துவமான இடமாகும், இது எங்கள் பார்வையாளர்களிடையே மெதுவாக இழுவைப் பெறுகிறது.
மீன்முட்டி அருவி : (Meenmutty Falls, Wayanad)
ஊட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. சுமார் 300 மீட்டர் உயரத்தில் இருந்து கொட்டிக் கொண்டிருக்கும் மீன்முட்டி அருவி, அழகும், ஆர்ப்பரிப்பும் மீன்முட்டி அருவியின் தனிச்சிறப்பு. விண்முட்டி நிற்கும் மீன்முட்டி அருவியின் அழகு, நம்மை கண்கொட்ட விடாமல் மீண்டும் மீண்டும் ரசிக்க வைக்கும்.
போக்குவரத்து, உணவு, தங்குமிடம் : (Transport, Food, Hotel)
வயநாட்டில் உணவைப் பொறுத்த வரை நாவிற்கு ருசியான நல்ல உணவு வகைகள் கிடைக்கின்றன. கல்பெற்றா, மானந்தவாடி, சுல்தான் பத்தேரி, வைத்திரி ஆகிய இடங்களில் தங்கும் விடுதிகள் உள்ளன. போக்குவரத்து வசதிகளை பொறுத்தவரை வயநாட்டுக்கு நல்ல ரோடு வசதிகள் உள்ளன. அருகில் உள்ள கோழிக்கோட்டில் ரயில் நிலையமும், விமான நிலையமும் உள்ளன.
கேம்ப் பயர், மரவீடுகள் : ( Camp Fire, Tree House)
காட்டுக்குள் காலாற நடந்து சென்று இயற்கையை ரசிக்கலாம். மரங்களின் மீது அமைக்கப்பட்டுள்ள மரவீடுகளில் தங்கி இயற்கையுடன் ஒன்றிப் போவதும் புதுமை அனுபவமே. இவை வயநாட்டின் ஸ்பெஷல்.