New Trend Tamil

Browse all latest informations

Tuesday, July 16, 2019

இயற்கை எழில் கொஞ்சும் கொல்லி மலை பற்றிய தகவல் ( Beautiful Kolli Hills Review in tamil )

Kolli Hills 


கொல்லி மலை  தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது. நாமக்கல் நகரில் இருந்து 55 கிமீ(kms) தொலைவில் கொல்லிமலை அமைந்துள்ளது. 
இம்மலைக் காடுகளின் நிலவிய கடுமையான சூழல் மற்றும் மலேரியா உள்ளிட்ட பல நோய் தாக்குதல் பரவலாக இருந்ததன் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு கொல்லி மலை என்ற பெயர் வந்தது. 
கொல்லி எனப்படும் வானலாவிய மரங்களை உடையதாலும், மும்மலங்களையும் முனைப்பையும் கொல்வதாலும் இம்மலை கொல்லிமலை எனப்பட்டது என்றும் சொல்லுவதுண்டு. 
கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. மலைப்பாதையின் தூரம் 26 கிமீ
Image result for kolli hills
இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும்.
பழந்தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் கொல்லி மலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமார் கிபி 200-ல், இந்தப் பகுதியை கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி ஆண்டு வந்தான். ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான் மற்றும் காட்டுப் பன்றியைக் கொன்றதாக வல்வில் ஓரியின் திறனைப் புகழ்ந்து பல பாடல்கள் உள்ளன.


ஆகாய கங்கை அருவி- Aagya Gangai falls

 
கொல்லி மலையில் அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாய கங்கை அருவி அய்யாறு ஆற்றின் மீது உள்ளது. 600 அடி உயரமுடைய இந்த நீர்வீழ்ச்சியை அடைய சுமார் 760 படிகட்டுகள் கீழிறங்கிச் செல்ல வேண்டும். படிகள் இறங்கி, ஏறுவது கடினமாக இருக்கும்

ராக் பில்லர் வியூ பாயிண்ட்- View Point

 
 
சீக்குப்பாறை மற்றும் சேலூர் நாடு ஆகிய இடங்களில் வியூ பாயிண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
செம்மேட்டில் (செம்மேடு என்பது இவ்வனப்பகுதியில் மையமான ஊராகும்; காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், மருத்துவமனை, நூலகம், தொலைபேசி நிலையம் முதலியன இங்கே உள்ளன.) 'வல்வில் ஓரி' மன்னனின் சிலை குதிரை மீதுள்ள 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு 1975ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் 'வல்வில் ஓரி விழா' நடத்தப்படுகிறது. வருடம் தோறும் ஆடி மாதம் 18-ஆம் நாள் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படுகிறது.

வாசலூர்பட்டி படகுத் துறை- Vasalurpatty Boat Department

 

 தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைத்திருக்கும் வாசலூர்பட்டி படகுத் துறை பார்க்கவேண்டிய இடமாகும் .அன்னாசி பழ ஆராய்ச்சி பண்ணை ஒன்றும் இங்கு தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
 
கொல்லி மலையில் அதிகளவில் அபூர்வ மூலிகைகள் கிடைக்கின்றன. சித்த வைத்தியத்திற்கு இந்த மூலிகைகள் பெரிதும் உதவுகின்றன. இம்மலையில் சித்தர்கள் பலர் வாழ்ந்து, நோய் தீர்க்கும் மருந்துகளை கண்டறிந்து கொடுத்துள்ளனர். கொல்லை மலையில் பல சரக்குகளை விற்கும் சந்தை வாரந்தோறும் நடக்கிறது.