New Trend Tamil

Browse all latest informations

Tuesday, July 16, 2019

சர்க்கரையின் மாற்று பொருள் - சீனி துளசி விளக்கம் ( Stevia Leaf)

Stevia Leaf- Explain: 


What is Stevia ?
Stevia is natural, unlike other sugar substitutes. It’s made from a leaf. Stevia is about 100 to 300 times sweeter than sugar but has No carbohydrates, calories, or artificial ingredients. This factor makes it a viable sweetening option for those who want to lose weight or are on a low-carb diet especially for diabetic’s patients.

ஸ்டீவியா என்றால் என்ன ?
சீனி துளசி என்றழைக்கப்படும் ""ஸ்டீவியா ரியோடியானா'" ஒரு மருத்துவ பயிர். இப்பயிர் சூரியகாந்தி குடும்பத்தைச் சார்ந்தது. இப்பயிரில் இருந்து எடுக்கப்படும் ""ஸ்டீவியோ சைட்'" மற்றும் ""ரிபோடிசைட்'" சர்க்கரைக்கு மாற்றாக உணவில் பயன்படுகிறது. மிக குறைந்த சர்க்கரை மற்றும் மாவு சத்து கொண்ட இந்த பொருட்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு மருந்தாக பயன்படுகிறது.
அனைத்து பொருளையும் இனிப்பாக சாப்பிட மற்றும்நீரிழிவு நோயை(Diabetes)கட்டுப்படுத்துவதிலும். இனிப்பு துளசி (Stevia) முக்கியத்துவம்.

"ஸ்டிவியா (Stevia) என்று சொல்லப்படும் 'இனிப்புத் துளசி அல்லது சீனித்துளசி' மூலிகைப் பயிர் வகையைச் சேர்ந்தது. இத்துளசியின் தாயகம் பராகுவே நாடு.  ஜப்பான், கொரியா, சீனா மற்றும் கனடாவிலும் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. ஏற்றுமதி விஷயத்தின் சீனாதான் சீனித்துளசியின் கில்லி. இந்தியாவில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இப்பயிர் பரவலாக வளர்க்கப்பட்டு வருகிறது. மனிதன் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் முக்கியமானது இனிப்புதான். அதிகமாக வெள்ளைச் சர்க்கரை வாங்க ஆரம்பித்த பின்னர்தான் சர்க்கரை நோய் மனிதனுக்கு வர ஆரம்பித்தது. ஆனால், கரும்பிலிருந்து பிரித்தெடுக்கப்படும் நாட்டுச் சர்க்கரையை விட, வெள்ளைச் சர்க்கரை மனிதனை அதிக நோய்களுக்கு ஆளாக்குகிறது. நாட்டுச் சர்க்கரை வாங்க முடியாதவர்கள் சீனித்துளசி செடிகளை வளர்க்கலாம். நான்கு பேர் அருந்த நான்கு இலைகளை சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தலாம். இதனால் வெள்ளைச் சர்க்கரை வாங்கவும் தேவையில்லை, நோய்வாய்ப்பு ஏற்படும் அபாயத்திலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். இந்தச் செடிகளை எளிதாக வீட்டில் வளர்க்கலாம். மற்ற செடிகளைப் போல இதற்கும் கவனிப்பு இருந்தாலே போதுமானது" என்றவர், சீனித்துளசி வளர்ப்பைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

’’சீனித்துளசியை நாற்றுப் பண்ணைகளிலும், நர்சரிகளிலும் வாங்கி வளர்க்கலாம். மாடித்தோட்ட தொட்டியிலோ அல்லது வீட்டின் தரைதளத்தில் உள்ள இடங்களிலோ வளர்க்கலாம். காலை, மாலை என இருவேளைகளிலும் தண்ணீர் ஊற்றவேண்டும். மண் ஈரமாகும் அளவுக்கு மட்டும் தண்ணீர் ஊற்றலாம். அதிக தண்ணீர் தேவையில்லை. 40 டிகிரி வெப்பம் வரை உள்ள பகுதிகளிலும் சீனித்துளசி செடியை வளர்க்க முடியும். செடிகளில் இலைகள் சற்று திடமாக வளர ஆரம்பிக்கும். அப்போதிருந்தே பறித்துப் பயன்படுத்தலாம். தேநீர் தவிர, வீட்டில் தயாரிக்கும் தின்பண்டங்கள் வரை இச்செடியின் இலைகளைப் பயன்படுத்தலாம். செயற்கையாகச் சேர்க்கப்படும் ரசாயன இனிப்பு வகைகளுக்கும் இது மாற்றாக இருக்கும். இச்செடியின் இலைகளைப் பறித்து காயவைத்து பொடியாக்கி சேமித்தும் பயன்படுத்தலாம். இதற்கு மருத்துவர்களிடமும் நல்ல வரவேற்பு உண்டு. முதலில் இதுபற்றி மருத்துவர்களிடம் விசாரித்தப் பிறகுதான் சீனித்துளசி செடியை வளர்க்க ஆரம்பித்தேன்.


கரும்பின் சர்க்கரையை விட 20 சதவிகிதத்துக்கும் மேல், இனிப்புச் சுவை அதிகமாக உள்ளது. மேலும், இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்களும் குறிப்பிட்ட அளவு உள்ளன. சீனித்துளசி ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்வதில்லை. இதனால் சர்க்கரை நோயாளிகளும் இனிப்பு துளசியின் பொடியை தேநீர், குளிர்பானங்கள் ஆகியவற்றில் கலந்து பயன்படுத்தலாம். இதனால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. துளசி என்றாலே மகத்துவம் வாய்ந்தது என்றுதான் பொருள். ஆனால், இந்தச் செடிகளை கவனமாகப் பராமரிக்க வேண்டும்.  2 அடி முதல் 3 அடி உயரம் வளரக்கூடிய இத்துளசி, இயற்கை உரம் மற்றும் மக்கிய தொழு உரத்தில் மட்டுமே வளரும். இது மிட்டாய் இலை, இனிப்பு இலை மற்றும் சர்க்கரை இலை எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது" என்றார்.
சாகுபடி குறிப்புகள்:ஸ்டீவியாவை பயிரிடும்போது சில காரணிகளை விவசாயிகள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
போதுமான வெளிச்சம் மற்றும் வெட்பம்: நல்ல வெளிச்சம் தேவை. மேலும் 38 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பநிலை இல்லாத இடம் மிக சிறந்தது.


காற்றின் ஈரப்பதம்: காற்றின் ஈரப்பதம் 60%க்கு மேல் இருந்தால் சீனி துளசி செழித்து வளரும்.
காற்றோட்டம்:சிறந்த காற்றோட்டம் உள்ள இடங்களை தேர்வு செய்து ஸ்டீவியாவை பயிரிட வேண்டும்.
இதன் விதைகள் மலட்டுதன்மை கொண்டது. மேலும் இதன் விதைகள் முளைப்பு திறன் மிக குறைவானதாலும் ஸ்டீவியாவை திசுவளர்ப்பு முறையில் வீரிய கன்றுகளாக மாற்றி பயிரிட்டு வரு கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 18 தனியார் விவசாய நிறுவனங்கள் ஸ்டீவியா கன்றுகளை விற்பனை செய்கின்றன. தமிழ்நாடு தோட்டக்கலை துறையை விவசாயிகள் அணுகினாலும் ஸ்டீவியா வீரிய கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம். தமிழகத்தை பொறுத்தவரை இப்பயிர் ""கான்டிராக்ட் பார்மிங்'' முறையில் பயிரிடப்படுகிறது.
மண்வகை: சிவப்பு வண்டல் மண் மிக சிறந்தது. மண்ணின் கார அமில தன்மை 6 முதல் 7 வரை இருக்க வேண்டும். சிறந்த வடிகால் வசதிதேவை. களிமண் பகுதிகளில் ஸ்டீவியா நன்றாக வளருவதில்லை.

உழவு: இரண்டு முறை உளி கலப்பை கொண்டு ஆழ உழவு செய்ய வேண்டும். ரோட்டவேட்டர் பயன்படுத்துவது நல்லது. மணல் கட்டிகள் இல்லாமல் இருக்க வேண்டும். அரை அடி உயரத்தில் அரை அடி அகலத்தில் பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும். பாத்திக்கு பாத்தி ஒரு அடி இடைவெளியை கடைபிடியுங்கள். செடிக்கு செடி அரை அடி இடைவெளி விட்டு நட்டால் ஏக்கருக்கு உங்களுக்கு 40 ஆயிரம் செடிகள் தேவைப்படும்.

தமிழ்நாடு தோட்டக்கலை உதவியுடன் 65% மானியத்தில் சொட்டுநீர் பாசன வசதி செய்துகொள்ளுங்கள். செடிகளில் வாட்டம் காணாமல் தண்ணீர் கொடுக்க வேண்டும். பரிந்துரைக்கப் படும் உர அளவு 110:45:45 என்பிகே / ஏக்கர். இயற்கை உரங்களை பயன் படுத்துவது நல்லது. அடியுரமாக ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் / இயற்கை உரம் இடவேண்டும். சூடோமோனாஸ், வெர்டிசீலியம் போன்ற உயிர் உரங்களை பயன்படுத்தி நல்ல மகசூல் பெறலாம்.
சீனி துளசியில் நமக்கு தேவை இலைகளே... பூக்கள் பூத்தால் செடியின் வளர்ச்சி நின்றுவிடும். எனவே பூக்கள் தென்படும் போதெல்லாம் நுனியை கிள்ளி பூக்களை எடுத்துவிட்டால் ஸ்டீவியா செழித்து வளரும். சிறந்த முறையில் பராமரிக்கப்படும் சீனிதுளசி 3 முதல் 5 வருடம் தொடர்ந்து நல்ல மகசூல் தரும்.

அறுவடை:சீனிதுளசியில் அதன் இலைகளே மகசூல். இலைகளை நாம் பறித்து எடுக்கலாம். அல்லது கிளைகளை பூமியிலிருந்து 10 முதல் 15 செ.மீ. உயரத்தில் வெட்டி எடுத்து பின் இலைகளை பிரித்துக்கொள்ளலாம். வருடத்திற்கு 4 முறை அறுவடை செய்யலாம். வருடத்திற்கு ஒரு எக்டேரில் சராசரியாக 21,500 கிலோ இலைகள் கிடைக்கும். இதை காயவைத்தால் ஏக்கருக்கு 3000 கிலோ காய்ந்த சீனி துளசி இலைகள் கிடைக்கும். சராசரி நிகர லாபம் ரூ.1,50,000/ஏக்கர்/வருடம்.
Image result for stevia good things
மருத்துவ பலன்கள்:   நீரிழிவு நோய்க்கு பயன்படும் இயற்கை சர்க்கரை. மிக குறைந்த கொழுப்பு சத்து கொண்ட சர்க்கரை உணவு. உணவு பொருட்களில் சேர்க்கப்படும் இயற்கை சர்க்கரை சுவை. ரத்த கொதிப்பை கட்டுப்படுத்துகிறது. ஜீரண சக்தியை சீராக்கும். அழகு சாதன பொருட்களில் ஸ்டீவியா பயன் படுகிறது. சரும நோய்களை தீர்க்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. இருதய நோய் தொடர்புடைய மருந்துகளில் ஸ்டீவியா உள்ளது. குளிர்பானங்களில் பயன்படுகிறது.
Related image