16 Foods That Are Right For Baby Brain Development :
வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி ( Brain Development ) சீராகவும், ஆரோக்கியமானதாகவும் வைப்பது பெற்றோர்களின் கடமை. ஆகவே குழந்தைகள் வளரும் போதே, அவர்களின் உடல் நலனில் பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் சரியாக குழந்தைகளை கவனிக்காவிட்டால், குழந்தைகளின் உடலில் ஊட்டச்சத்து பற்றாக்குறை, வைட்டமின் பற்றாக்குறை போன்றவை ஏற்படும். மேலும் குழந்தைகள் வளர்ந்த பின்னர், அவர்களை பள்ளிக்கு அனுப்பும் போது நன்கு புத்திசாலித்தனத்துடனும், சிறந்த அறிவாளியாகவும் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் ஆசைப்படுவார்கள்.
ஆனால் ஆசைப்பட்டால் மட்டும் போதாது, அவர்களின் மூளையை நன்கு செயல்பட வைக்கவும், ஆர்வத்தை அதிகரிக்கவும், மூளையின் இயக்கத்தை சீராக வைக்கக்கூடிய உணவுகளை சிறுவயதிலிருந்தே கொடுக்க வேண்டும். உடலிலேயே அதிக சத்துக்களை உறிஞ்சுவது மூளை தான். அதுமட்டுமின்றி, மூளை தான் உடலின் அனைத்து உறுப்புக்களை இயக்குகிறது. எனவே அத்தகைய முக்கியப் பகுதியை ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் மாற்றிவிடுகின்றன.
எனவே மூளையை பாதுகாப்பதற்கு ஒரே வழி உணவு தான். ஆகவே அந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், மூளை ஆரோக்கியமாக இருப்பதோடு, நன்கு செயல்பட்டு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும். சரி,
சிறுவயதிலிருந்தே குழந்தைகளின் மூளை வளர்ச்சியை சீராக வைக்கும் உணவுகள் :
1. சால்மன் மீன் (Salmon Fish )
மீன்களில் சால்மன் மீனில் ஒமேகா-3 ,ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இத்தகைய ஃபேட்டி ஆசிட் உடலை ஆரோக்கியமாக வைப்பதோடு, மூளையின் வளர்ச்சியையும், செயல்பாட்டையும் சீராக வைக்கும்.
2. வேர்க்கடலை (Peanuts)
பொதுவாக குழந்தைகளுக்கு பொரித்த உணவுகளை ஸ்நாக்ஸாக கொடுப்பதற்கு பதிலாக, வேர்க்கடலையை வறுத்தோ அல்லது வேக வைத்தோ கொடுத்தால், மூளைக்கு மிகவும் நல்லது.
3. தானியங்கள் (Cereals)
மூளைக்கு எப்போதும் குளுக்கோஸானது சீராக செல்ல வேண்டும். அத்தகைய குளுக்கோஸ் தானியங்களில் அதிகம் உள்ளது. எனவே தானியங்களால் ஆன பிரட்டை (wheat bread)வைத்து, காலை அல்லது மாலை வேளையில் சாண்ட்விச் செய்து கொடுத்தால், குழந்தைகளின் வயிறு நிறைவதோடு, மூளை வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.
4. முட்டை (Egg)
புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ள முட்டையின் மஞ்சள் கருவில், கோலைன் என்னும் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் பொருள் அதிகமாக உள்ளது. எனவே வளரும் குழந்தைகளுக்கு தினமும் 2 முட்டைகளை கொடுத்தால், குழந்தைகளின் மூளையானது சீராக இயங்கும்.
5. பெர்ரிப் பழங்கள் (Berry Fruits)
ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, ப்ளூபெர்ரி, ப்ளாக்பெர்ரி போன்ற பழங்களின் சுவைகள் குழந்தைகளுக்கு பிடிக்கும். மேலும் இத்தகைய பழங்களை குழந்தைகள் அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தியானது அதிகரிக்கும் என்று ஆய்வுகளும் நிரூபித்துள்ளன. ஆகவே இதனை கொடுக்க மறக்க வேண்டாம்.
6. பீன்ஸ் (Beans) Cowpea
உண்மையில் பீன்ஸ் ஒரு ஸ்பெஷலான உணவுப் பொருள் தான். ஏனெனில் இதில் உள்ள புரோட்டீன், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், நார்ச்சத்துக்கள் மற்றும் நிறைய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன.
அதிலும் காராமணி மற்றும் பிண்டோ பீன்ஸ் போன்றவற்றில் ஒமேகா-3 (Omega 3) ஃபேட்டி ஆசிட் (Fatty acid )மற்ற பீன்ஸ்களை விட அதிகமாக உள்ளது. அதிலும் ALA என்னும் மூளையின் செயல்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் தேவையான பொருள் உள்ளது.
7. ஆப்பிள் (Apple)
மூளையில் உள்ள நரம்புகளுக்கு இடையில் செய்திகளைப் பரப்புவதற்கு உதவும் அசிடைல்கொலின் (Acetylcholine) என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்ய ஆப்பிள்கள் உதவக்கூடும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (Antioxidants)
இருப்பது ஒரு போனஸ் ஆகும், இது ஃப்ரீ ரேடிக்கல்களால் மூளைக்கு ஏற்படும் எந்தவொரு சேதத்தையும் மாற்ற உதவுகிறது. ஆப்பிள்களை முதல் உணவாகவும், உங்கள் குழந்தையின் இடைநிலை உணவு நிலைகளிலும் வழங்க எளிதானது.
8. கேரட் (Carrots)
கேரட்டில் அதிக அளவு பீட்டா கரோட்டின் உள்ளது, இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும், இது அவற்றின் ஆரஞ்சு நிறத்தை அளிக்கிறது. பீட்டா கரோட்டின் உடலில் வைட்டமின் ஏ ஆக மாறி வளர்ச்சியிலும் ஆரோக்கியமான பார்வையிலும் பங்கு வகிக்கிறது. கேரட் சமைப்பது அவற்றின் இயற்கையான இனிமையை வெளிப்படுத்துகிறது, இது இனிப்பு சுவைகளுக்கு விருப்பத்துடன் பிறந்த குழந்தைகளை ஈர்க்க வைக்கிறது. உங்கள் சிறியவருக்கு கேரட் தயாரிக்கும் போது, அவை மிகவும் மென்மையாக இருக்கும் வரை சமைக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பின்னர் குழந்தைகளுக்கு நன்கு சமைத்த துண்டுகளாக்கப்பட்ட கேரட்டை கொடுக்கலாம்.
9. தக்காளி (Tomato)
மூளையில் ஏற்படும் பிரச்சனையை போக்குவதில் தக்காளி முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில் இதில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை உடலில் பிரச்சனையை உண்டாக்கும் செல்களை அழித்து விடுகின்றன. எனவே குழந்தைகளுக்கு ஞாபக மறதி எதுவும் ஏற்படாமல் இருப்பதற்கு, தக்காளியை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.
10. பூசணி விதைகள் (Pumpkin seeds)
பூசணி விதைகளில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஜிங்க் சத்து அதிகம் உள்ளது. அவை குழந்தைகளின் மூளை வளர்ச்சியை ஆரோக்கியமானதாக வைப்பதற்கு, பூசணி விதைகளை கொடுக்க வேண்டும்.
11. பால் பொருட்கள் (Dairy products)
பால் பொருட்களில் புரோட்டீன் மற்றும் மூளை வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் பி அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே குழந்தைகளுக்கு தவறாமல் தினமும் பால் பொருட்களை கொடுப்பது அவசியமாகிறது.
12. நட்ஸ் (Nuts)
நட்ஸ் வகைகளில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. பொதுவாக வைட்டமின் ஈ குறைபாடும் ஞாபக மறதியை உண்டாக்கும். எனவே நட்ஸ் வகைகளை அதிகம் கொடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இதில் உடலுக்கு தேவையான கொழுப்புக்களும் நிறைந்துள்ளன
13. ப்ராக்கோலி (Broccoli)
ப்ராக்கோலி மற்றொரு வகையான மூளைக்கு ஆரோக்கியத்தை தரும் உணவுப் பொருள். இதில் வைட்டமின் கே, சி மற்றும் ஆன்டி.-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், இதனை குழந்தைகள் சாப்பிடும் போது, மூளை நன்கு செயல்படும்.
14. ஆளி விதை (Linseed)
ஆளி விதையில், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் நல்ல கொழுப்புக்களான ALA அதிகம் உள்ளது. எனவே இதனை குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் சேர்த்து கொடுத்து, உடலையும் மூளையின் செயல்பாட்டையும் சீராக இயங்கச் செய்யலாம்.
15. டார்க் சாக்லெட் (Dark chocolate)
16. வெண்ணெய் பழம்(Avocado fruit)
வெண்ணெய் பழம் மூளை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது நிறைவுறா கொழுப்புகளின் வளமான மூலமாகும், இது மூளைக்கு இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. இதில் ஒலிக் அமிலமும் உள்ளது, மெய்லின் (myelin) ஒரு மணி நேரத்திற்கு 200 மைல் வேகத்தில் தகவல் மூளைக்கு அனுப்ப உதவுகிறது. வெண்ணெய் பழங்களில் பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் அதிக அளவில் இருப்பதால் குழந்தைகளுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.