New Trend Tamil

Browse all latest informations

Wednesday, July 31, 2019

குங்குமப்பூவின் தனிச்சிறப்பும் அதன் மருத்துவ குணமும் !! ( Saffron's specialties & medicinal properties )

Saffron's Specialty & Medicinal properties:

    
    

What Is Saffron?

A spice derived from the flower of Crocus sativus ( scientific name), saffron  is mainly used as a seasoning and coloring agent in food. Apart from its uses, it is also well known for being one of the most expensive spices in the world.   


குங்குமப்பூக்களின் உள்ளே இருக்கும் நார்களையே குங்குமப்பூ என்று அழைக்கிறோம். இதன் நிறம்  பசுமை கலந்த சிவப்பு நிறத்தில் இருக்கும் . நறுமண முடையதாகவும், சிறிது கசக்கும் தன்மையுடனும்  இருக்கும் . குங்குமப்பூவைத் தண்ணீரில் கரைத்தால் மஞ்சள் நிறம் உண்டாகும். 
 


குங்குமப்பூவை எப்படி பயன்படுத்த வேண்டும் ?
              (How to use this saffron?) 
  • உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.
  • சிகப்பழமைப் பெறத் துடிக்கும் பெண்மணிகள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை, குங்குமப்பூ ஒன்றே போதுமானது . 
  • இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும். 
  • நான்கு அல்லது ஐந்து துளசி இலைகளை எடுத்து 15 குங்குமப்பூவைச் சேர்த்து அரைக்க வேண்டும் . இதை முகப்பருக்கள் மீது தடவி, அரைமணி நேரம் ஊறி பின்பு முகத்தைக் கழுவ வேண்டும் . வாரம் ஒருமுறை இவ்வாறு செய்தால் பருக்கள் மறைந்துவிடும். மேற்கொண்டு பருக்கள் வராது.

  • முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. 
  • இதயம் மற்றும் மூளைக்கு சக்திதர குங்குமப்பூ அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆண்மைக் குறைவைப் போக்க மற்ற மருந்துகளில் கலந்து பயன்படுத்துவார்கள்.
  • உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது. குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும. அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ள வேண்டும் . இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாக தெரியும் .
  • சில பெண்கள் நல்ல நிறமாக இருப்பார்கள்.  ஆனால் உதடுகள் மட்டும் கருமை படர்ந்து அசிங்கமாக இருக்கும். இப்படிப்பட்ட பெண்கள் குங்குமப்பூவை பயன்படுத்தினால் அழகு தேவதையாக மாறி விடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
  • கொஞ்சம் குங்குமப்பூவை வெற்றிலையுடன் சேர்த்துச் சாப்பிடவும். ஜீரண சக்தி பெருகும். வாய் நாற்றமின்றி மணக்கும்.

  • காய்ந்த குங்குமப்பூவை பாலில் கலந்து கொதிக்க வைத்து கருவுற்ற மூன்றாம் மாதத்திலிருந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுத்து வந்தால் குழந்தை ஆரோக்கியமாக வளரும். தாய்க்கும் சிசுவிற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். சுகப்பிரசவம் ஆக அதிக வாய்ப்புண்டு.
  • பத்து குங்குமப்பூ எடுத்து கொள்ளவும்  ஒரு டீஸ்பூன் கடலைப் பருப்பை அதனுடன் சேர்க்கவும். இரண்டையும் சேர்த்து இரண்டு ஸ்பூன் பாலில் ஊற வைக்க வேண்டும்.  பின்பு அரைத்து அதன் விழுதை முகத்தில் பூசி 15 நிமிடங்கள்(Minutes) கழித்து கழுவி விட்டால் முகம் பளிச் என்று ஆகிவிடும்.

  • கர்ப்பிணிகளுக்கு இரத்தத்தில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி அதிகளவு இரும்புச்சத்தை உட்கிரகிக்கச் செய்து உடலுக்கு பலம் கொடுக்கும். சிசுவிற்கு சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாதவாறு காக்கும்.
  • கர்ப்பிணிகள் எட்டாம் மாதத்திலிருந்து குங்குமப்பூவைச் சாப்பிட்டால் குழந்தை ஆரோக்யமாகப் பிறக்கும். இரண்டு குங்குமப்பூவை காய்ச்சிய பாலில் கலந்து குடிக்கவும்.
  • வயிற்றில் புண் குணமாக குங்குமப்பூவை நாலை எடுத்து காய்ச்சிய பாலில் சேர்த்து நாற்பது நாட்கள்  குடித்து வரவேண்டும் அப்படி குடித்தால் அல்சர் புண்  ஆறிவிடும்.
  • குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் முகத்திலும்,உதடுகளிலும் பூசிவர, உதடுகள் செவ்வாழை நிறம் பெறும்.