Thursday, November 23, 2023
இதுதான் நம் குடும்ப விதிமுறைகள், இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்பதை உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு வெளிப்படையாக எடுத்துச் சொல்வதற்கு மாறாக, குறிப்பிட்ட அந்த பிரபலத்தின் வாழ்க்கை, சிக்கலில் முடியாமலிருக்க அவர்கள் தம் டீன் ஏஜ் பருவத்தில் எப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கலாம் என்று டிஸ்கஸ் செய்தால் விதிமுறைகள் நாசூக்காக உள்ளேறும்.
உதாரணத்துக்கு, உங்கள் பெண் ஒரு பார்ட்டிக்கு சென்று இரவு 10 மணிக்கு வீடு திரும்பும் திட்டத்துடன் இருக்கிறாள் என வைத்துக் கொள்வோம். முதலில் பார்ட்டி நடக்கும் இடத்துக்கு நீங்களோ வேறு பொறுப்பான நபரோ அவளை கூட்டிச் சென்று அங்கு நம்பகமான, பொறுப்பான நபரிடம் ஒப்படைக்க ஒப்பந்தம் பேசலாம். அந்த நபர், உங்கள் பெண் பொறுப்புடன் நடந்து கொள்வதை கண்
Wednesday, November 22, 2023
Z NEW FOLDER.EXE- What to do to remove the virus?
நியூஃபோல்டர்.exe (NEWFOLDER.EXE) வைரஸ் என்பது மிகவும் ஆபத்தான வைரஸ்களில் ஒன்றாகும், இது யூ.எஸ்.பி கோப்புகளில் கோப்புகளை மறைக்கிறது மற்றும் பணி மேலாளர், ரெஜிடிட் மற்றும் கோப்புறை விருப்பங்கள் போன்ற விஷயங்களை முடக்குகிறது. வைரஸ் உங்கள் தற்போதைய கோப்புகளைப் பிரதிபலிக்கும் .exe கோப்புகளை உருவாக்குகிறது, இது வைரஸ் உங்கள் சேமிப்பக இடத்தின் 50% ஐ எடுத்துக்கொள்கிறது, மேலும் பிற மோசமான பக்க விளைவுகளுடன், இது உங்கள் கணினி வேகம் மற்றும் செயல்திறனில் கடுமையான இழப்பை அனுபவிக்கும்.
உங்கள் கணணியில் Pen Drive சொருகும் போது NEWFOLDER.EXE virus என்று Folder ஒன்று உருவாகும் இதுவே வைரஸ் நம் கணினியில் உள்ளது என்பதை காணமுடியும்

Task manager is disabled.
Registry Editor is disabled.
Folder options not working.
Taking too much time for accessing pen drive.
Uses half of your computers processing power.
- reg add HKLM\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System /v Disable Task Mgr /t REG_DWORD /d 0 /f
- reg add HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System /v DisableTaskMgr /t REG_DWORD /d 0 /f
- reg add HKLM\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System /v Disable Registry Tools /t REG_DWORD /d 0 /f
- reg add HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System /v Disable Registry Tools /t REG_DWORD /d 0 /f
1. டிவி, குளிர்சாதனப்பெட்டி, ட்யூப் லைட் இவற்றை உபயோகத்திற்குப்பின் அணைத்து விட்டு மீண்டும் உடனே போடக்கூடாது. ரெஃப்ரிஜிரேட்டரில் கம்ப்ரெஸ்ஸரும், டிவியில் பிக்சர் ட்யூபும் ட்யூப் லைட்டில் பாலண்டும் பழுதாகி விடும். நிறுத்திய பின் உள்ளே மாற்றங்கள் நிகழ்ந்து பூர்த்தியாக சில நிமிடங்கள் பிடிக்கும். சில நிமிடங்கள் விட்டு மறுபடியும் போடுவது நல்லது.
2. குளிர்சாதனப்பெட்டியைத் துடைக்கும்போது பச்சைக்கற்பூரம் கலந்த நீரினால் துடைத்தால் பூச்சிகள், சிறு வன்டுகள் உள்ளே நுழையாது.
3. கறுத்துப்போன வெள்ளி சாமான்களை தாம்பூல சுண்ணாம்பு கொண்டு தேய்த்தால் பளபளவென்று ஆகி விடும்.
4. சர்க்கரை வைத்திருக்கும் பாட்டிலில் சில ஏலக்காய்களைப் போட்டு வைத்தால் எறும்புகள் சீனியை மொய்க்காது.
5. சில வகை தண்ணீரில் துணிகள் துவைக்கும்போது துணிகள் பழுப்பாகி விடுகின்றன. இதற்கு அவற்றை சோப் பவுடரில் ஊறவைக்கும்போது 2 மேசைக்கரண்டி கல் உப்பும் சேர்த்து ஊறவைத்தால் துணிகள் பழுப்பு நிறம் நீங்கி பளிச்சென்றாகி விடும்.
6. மரச்சாமான்களை பாலீஷ் செய்வதற்கு, முதலில் அவற்றை வினீகர் கலந்த நீரால் கழுவி, துடைத்து காய வைத்து பிறகுதான் பாலீஷ் பூச வேண்டும்.
7. மூட்டைப்பூச்சி தொந்தரவிற்கு, கட்டிலின் நான்கு கால்களிலும் சூடம் அல்லது புரசம் பூவை வைத்து கட்டி வைக்க வேண்டும். தலையணை, மெத்தை இவற்றில் கற்பூரத்தைத் தூள் செய்து தூவலாம்.
8. தோல் பொருள்களின் நிறம் மங்காதிருக்க, அவற்றின் மீது லின்ஸிட் ஆயில் எனப்படும் ஆளி விதை எண்ணையைப் பூசி துடைக்க வேண்டும்.
9. ஈக்கள் அதிகம் உள்ள இடத்தில் தூவக்காலில் நெருப்பிட்டு கிராம்புத்தூளைத் தூவினால் ஈக்கள் பறந்து விடும்.
10. மெழுகுவர்த்தி அதிக வெளிச்ச்சம் தர, அதை ஒரு பாத்திரத்தில் நிற்க வைத்து அதன் அடியில் தண்ணீர் ஊற்றி எரிய விடவும். உப்பில் புதைத்து வைத்தும் எரிய விடலாம்.
Some Useful tips for home :
1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.
3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.
4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.
5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.
7. கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.
9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.
10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும்.
11. காரட் மற்றும் தக்காளிச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெரும்.
12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.
எல்லா உணவு வகைகளில் உள்ளதைவிட இதில் காரப்பொருள் அதிக அளவுடனும், உறுதியான பொருளாகவும் இருக்கிறது. இதுதான் நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது.
யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றிவிடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.
ஊட்டச்சத்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயைக் குணப்படுத்த உருளைக்கிழங்கு மசியலைக் சாப்பிட்டால் போதும். அவித்த உருளைக்கிழங்குகளை தோலுடன் மசித்துத் தினமும் ஒருவேளை வீதம் ஒரு வாரம் முதல் பத்து நாள்கள் வரை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பச்சையான உருளைக்கிழங்கு ரசம் தரும் நன்மைகள்!
வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், ஆகியன உள்ளவர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளாகப் பார்த்து எடுத்து, அவற்றை பச்சையாக மிக்ஸி மூலம் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக இந்தச் சாற்றில் அரை கப் அருந்த வேண்டும்.
இதுபோல், மூன்று வேளையும் உணவு நேரத்துக்கு முன்பு அருந்த வேண்டும். உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது. இதே உருளைக்கிழங்குச்சாற்றை உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப்பகுதிகளில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும், வாத நோய்களுக்கும் வெளிப்பூச்சாகத் தேய்க்க உடல் நலமுறும்.
இந்தச்சாற்றை அடுப்பில் வைத்து மூன்றில் ஒரு பங்காக வற்றச் செய்து அதில் கிளிசரின் சேர்த்து, பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவேண்டும். வீக்கம், வலி ஆகியன உள்ள இடங்களில் இரண்டு அல்லது மூன்ற மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தைலத்தை அழுத்தித் தேய்த்தால் ஒரே நாளில் வீக்கம் குறையும் வலியும் நீங்கும்.
வாத நோய் குணமாகும்!
இரு பச்சையான உருளைக்கிழங்குகளைத் தோலுடன் மிக்ஸியில் அரைத்துச் சிறிது தண்ணீர்விட்டு, இரு தேக்கரண்டி வீதம், உணவு சாப்பிடுவதற்கு முன்பு, அருந்த வேண்டும். இப்படி அருந்திய சாறு உடலில் வாதநோயைத் தோற்றுவிக்கும் அமிலத்தை வெளியேற்றிவிடுகிறது. தொடர்ந்து உட்கொண்டால் வாதநோய் முற்றிலும் குணமாகும் சாத்தியம் அதிகம் உண்டு.
அவித்த உருளைக்கிழங்குகளின் தோல்களைச் சேகரித்து, சுத்தம் செய்து, ஒரு டம்ளர் தண்ணீரில் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும். பிறகு, இந்தக் கஷாயத்தை அருந்தினாலும் கீல் வாதம் குணமாகும். இந்த முறையில் தினமும் மும்முறை தயாரித்து அருந்த வேண்டும்.
நீண்ட நாள் மலச்சிக்கல் தீர...
கெட்டுப்போன இரத்தம், குடல்பாதையின் நச்சுத்தன்மை உள்ள அமிலம், சிறுநீரில் உள்ள புளிப்பு அமிலம் தொடர்பாக ஏற்படும் நோய்கள் உள்ளோர், நீண்ட நாள் மலச்சிக்ககால் அவதிப்படுவோர் ஆகியோர் உருளைக்கிழங்கு வைத்தியத்தை குறைந்தது ஆறுமாதங்கள் பின்பற்றினால் மேற்கண்ட நோய்களிலிருந்து பூரண நலம் பெறலாம்.
தினசரி உணவில் உருளைக்கிழங்கை அவித்தோ, வேகவைத்தோ, பொரித்தோ, சூப்வைத்தோ சேர்த்துக்கொள்வதுதான் உருளைக் கிழங்கு வைத்தியம். சோறு, சப்பாத்தி போன்றவற்றைக் குறைத்துக்கொண்டு உருளைக்கிழங்குடன் கீரைவகைகளை, குறிப்பாக லெட்டூஸ், பசலைக்கீரை, தக்காளி, செலரி, வெள்ளரிக்காய், பிட்ரூட் கிழங்கு, டர்னிப் கிழங்கு போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.
இதன்மூலம் தோலில் உள்ள அழுக்குகளும், சுருக்கங்களும் நீங்கிவிடும். மலச்சிக்கலும் அகன்று இரத்தம் சுத்தம் செய்யப்பட்டுப் புத்தம் புது மனிதனாக ஒவ்வொரு நாளையும் சந்திக்கலாம்
முகத்திற்கு பீளிச்சிங் வேண்டாம்!
வயதால் முகத்திலும், உடலிலும் சுருக்கம் உள்ளவர்கள் பச்சையாக உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு இரவில் தூங்கச் செல்ல வேண்டும். சுருக்கங்களை போக்கிச் சலவை செய்த துணிபோல இளமைத் துடிப்புள்ள முகத்தையும், சுருக்கமில்லாத தோலையும் உடலுக்குத் தந்துவிடுகிறது. இந்த வைத்தியம், அமெரிக்காவில் இந்த முறையில் இயற்கையாக முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கங்களை நீக்கிக்கொள்கின்றனர்.
உருளைகிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியமானதாகவும் வைப்பது பெற்றோர்களின் கடமை. ஆகவே குழந்தைகள் வளரும் போதே, அவர்களின் உடல் நலனில் பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் சரியாக குழந்தைகளை கவனிக்காவிட்டால், குழந்தைகளின் உடலில் ஊட்டச்சத்து பற்றாக்குறை, வைட்டமின் பற்றாக்குறை போன்றவை ஏற்படும். மேலும் குழந்தைகள் வளர்ந்த பின்னர், அவர்களை பள்ளிக்கு அனுப்பும் போது நன்கு புத்திசாலித்தனத்துடனும், சிறந்த அறிவாளியாகவும் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் ஆசைப்படுவார்கள்.
ஆனால் ஆசைப்பட்டால் மட்டும் போதாது, அவர்களின் மூளையை நன்கு செயல்பட வைக்கவும், ஆர்வத்தை அதிகரிக்கவும், மூளையின் இயக்கத்தை சீராக வைக்கக்கூடிய உணவுகளை சிறுவயதிலிருந்தே கொடுக்க வேண்டும். உடலிலேயே அதிக சத்துக்களை உறிஞ்சுவது மூளை தான். அதுமட்டுமின்றி, மூளை தான் உடலின் அனைத்து உறுப்புக்களை இயக்குகிறது. எனவே அத்தகைய முக்கியப் பகுதியை ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் மாற்றிவிடுகின்றன.
எனவே மூளையை பாதுகாப்பதற்கு ஒரே வழி உணவு தான். ஆகவே அந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், மூளை ஆரோக்கியமாக இருப்பதோடு, நன்கு செயல்பட்டு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும். சரி, இப்போது சிறுவயதிலிருந்தே குழந்தைகளின் மூளை வளர்ச்சியை சீராக வைக்கும் உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!
சால்மன்
மீன்களில் சால்மன் மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இத்தகைய ஃபேட்டி ஆசிட் உடலை ஆரோக்கியமாக வைப்பதோடு, மூளையின் வளர்ச்சியையும், செயல்பாட்டையும் சீராக வைக்கும்.
முட்டை
புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ள முட்டையின் மஞ்சள் கருவில், கோலைன் என்னும் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் பொருள் அதிகமாக உள்ளது. எனவே வளரும் குழந்தைகளுக்கு தினமும் 2 முட்டைகளை கொடுத்தால், குழந்தைகளின் மூளையானது சீராக இயங்கும்.
வேர்க்கடலை
பொதுவாக குழந்தைகளுக்கு பொரித்த உணவுகளை ஸ்நாக்ஸாக கொடுப்பதற்கு பதிலாக, வேர்க்கடலையை வறுத்தோ அல்லது வேக வைத்தோ கொடுத்தால், மூளைக்கு மிகவும் நல்லது.
தானியங்கள்
மூளைக்கு எப்போதும் குளுக்கோஸானது சீராக செல்ல வேண்டும். அத்தகைய குளுக்கோஸ் தானியங்களில் அதிகம் உள்ளது. எனவே தானியங்களால் ஆன பிரட்டை வைத்து, காலை அல்லது மாலை வேளையில் சாண்ட்விச் செய்து கொடுத்தால், குழந்தைகளின் வயிறு நிறைவதோடு, மூளை வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.
ஓட்ஸ்
குழந்தைகளின் மூளைக்கு வளர்ச்சிக்கு தேவையான உணவுகளில் முக்கியமானது ஓட்ஸ். ஓட்ஸ் குழந்தைகளின் உடலுக்கு மட்டுமின்றி, மூளைக்கும் ஆரோக்கியத்தை தரும். எனவே அவ்வப்போது ஓட்ஸ் கொடுத்து, ஞாபக சக்தியை அதிகமாக்குங்கள்.
பெர்ரிப் பழங்கள்
ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, ப்ளூபெர்ரி, ப்ளாக்பெர்ரி போன்ற பழங்களின் சுவைகள் குழந்தைகளுக்கு பிடிக்கும். மேலும் இத்தகைய பழங்களை குழந்தைகள் அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தியானது அதிகரிக்கும் என்று ஆய்வுகளும் நிரூபித்துள்ளன. ஆகவே இதனை கொடுக்க மறக்க வேண்டாம்.
பீன்ஸ்
உண்மையில் பீன்ஸ் ஒரு ஸ்பெஷலான உணவுப் பொருள் தான். ஏனெனில் இதில் உள்ள புரோட்டீன், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், நார்ச்சத்துக்கள் மற்றும் நிறைய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. அதிலும் காராமணி மற்றும் பிண்டோ பீன்ஸ் போன்றவற்றில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்ற பீன்ஸ்களை விட அதிகமாக உள்ளது. அதிலும் ALA என்னும் மூளையின் செயல்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் தேவையான பொருள் உள்ளது.
தக்காளி
மூளையில் ஏற்படும் பிரச்சனையை போக்குவதில் தக்காளி முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில் இதில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை உடலில் பிரச்சனையை உண்டாக்கும் செல்களை அழித்து விடுகின்றன. எனவே குழந்தைகளுக்கு ஞாபக மறதி எதுவும் ஏற்படாமல் இருப்பதற்கு, தக்காளியை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.
பூசணி விதைகள்
பூசணி விதைகளில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஜிங்க் சத்து அதிகம் உள்ளது. எனஅவ குழந்தைகளில் மூளை வளர்ச்சியை ஆரோக்கியமானதாக வைப்பதற்கு, பூசணி விதைகளை கொடுக்க வேண்டும்.
குடைமிளகாய்
குடைமிளகாயும் மூளைக்கு ஏற்ற ஒரு சிறப்பான உணவு. அதிலும் குடைமிளகாயில், ஆரஞ்சை விட, அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே உணவில் குடைமிளகாயை சேர்த்து கொடுப்பது, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கும்.
பால் பொருட்கள்
பால் பொருட்களில் புரோட்டீன் மற்றும் மூளை வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் பி அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே குழந்தைகளுக்கு தவறாமல் தினமும் பால் பொருட்களை கொடுப்பது அவசியமாகிறது.
நட்ஸ்
நட்ஸ் வகைகளில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. பொதுவாக வைட்டமின் ஈ குறைபாடும் ஞாபக மறதியை உண்டாக்கும். எனவே நட்ஸ் வகைகளை அதிகம் கொடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இதில் உடலுக்கு தேவையான கொழுப்புக்களும் நிறைந்துள்ளன
ப்ராக்கோலி
ப்ராக்கோலி மற்றொரு வகையான மூளைக்கு ஆரோக்கியத்தை தரும் உணவுப் பொருள். இதில் வைட்டமின் கே, சி மற்றும் ஆன்டி.-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், இதனை குழந்தைகள் சாப்பிடும் போது, மூளை நன்கு செயல்படும்.
ஆளி விதை
ஆளி விதையில், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் நல்ல கொழுப்புக்களான ALA அதிகம் உள்ளது. எனவே இதனை குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் சேர்த்து கொடுத்து, உடலையும் மூளையின் செயல்பாட்டையும் சீராக இயங்கச் செய்யலாம்.
டார்க் சாக்லெட்
சாக்லெட் குழந்தைகளுக்கு கொடுக்காமல் சில அம்மாக்கள் இருப்பார்கள். ஆனால் உண்மையில் தினமும் குழந்தைகளுக்கு ஒரு துண்டு டார்க் சாக்லெட் கொடுப்பது மிகவும் நல்லது. இது அவர்களது உடலை மட்டும் ஆரோக்கியத்துடன் வைப்பதோடு, மூளை வளர்ச்சியை ஆரோக்கியமானதாக வைக்கும்.
கோகோ பீன்ஸ்
ஆய்வு ஒன்றில் கோகோ பீன்ஸை அதிகம் சாப்பிட்டால், மூளையின் ஆரோக்கியமானது அதிகரிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே கோகோ பீன்ஸை வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், மிகவும் நல்லது.
Wednesday, March 29, 2023
இந்த பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் இருக்கிறது என்று நினைப்பது மிகப்பெரிய தவறு, பல பில்லியன் கோடி நட்சத்திரங்களில், ஒரு நட்சத்திரம் ஆன சூரியன் என நாம் பெயரிட்டு கொண்ட நெருப்பு பந்தை சுற்றி வரும் ஒரு சுமாரான கிரகத்தில் அதை விட சுமாரான அமைப்போடு சுற்றும் சுமார் மூஞ்சி குமார்கள் தான் நாம் என்பதை மறந்து விட வேண்டாம், எண்ணிலடங்கா உயிரினங்கள் இப்பிரபஞ்சம் முழுவதும் இருப்பதற்கு வாய்ப்புள்ளது, அவை நம்மை விட அறிவில் மிஞ்சியதாக இருக்கலாம், முக அமைப்பில் நம்மை விட சுமாராக இருக்கலாம்,
நிகழ்தகவு (Probability) படி கணக்கு போட்டு பார்த்தால் பூமியை மாதிரியே கிரகங்கள் அமைவதற்கும் நம்மை மாதிரி அறிவான உயிரிகள் பரிணாம் அடைவதற்கும் எச்சக் கச்ச வாய்ப்புள்ளது என்பது தான் அறிவியல் கூறுகிறது,,,
பொதுவாகவே நம் மக்களிடம் ஒரு நல்ல குணம் உண்டு அதாவது பக்கத்து வீட்டுக்காரன் வீட்ல என்ன நடக்குது? சண்ட ஏதாவது நடக்குதா இல்ல சுமூகமா போகுதா? இன்னைக்கு என்ன குழம்பு வச்சானுங்க இன்னும் வாசனையே வரலயே ? என்பது போன்ற நமது அண்டை வீட்டார்களின் மேல் கொஞ்சம் பாசம் அதிகம் தான். அமெரிக்காவிற்கு அது ரெம்பவே அதிகம், பாசம் பக்கத்து நாட்டவர்கள் வரை கூட நீளும், நாம் மட்டும் இப்படி ஏன்டா பொறந்தோம்னு நொந்துகிட்டு இருக்கோமா இல்ல நம்மள மாதிரியே யாராவது வேற்று கிரக உயிரிகள் இதே மாதிரி பீல் பண்ணிட்டு இருக்கிறார்களா என்று கண்டறிய பல முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
இதற்காகவே நாசா விஞ்ஞானிகள் 1977-இல் 'வாயேஜர்-1' என்ற ஒரு விண்கப்பலை தயார் செய்து அதில் நமது உருவம், நமது பூமியை பற்றிய சில குறிப்புகள், இசை குறிப்புகள், நமது மொழிகள் மற்றும் இன்னபிற தகவல்களை பதிவு செய்து, நமது சூரிய குடும்பத்தில் உள்ள எந்த கிரகம் மீதும் மோதாத மாதிரி பூமியில் இருந்து ஏவி விட்டனர், ஒரு முறை பூமியின் ஈர்ப்பு விசையை தாண்டி எந்த பொருளையும் வெளியே எறிந்து விட்டால் போதும் அது வேறொரு ஈர்ப்பு விசையில் ஆட்படும் வரையிலும் அதே வேகத்தில் சென்று கொண்டிருக்கும்,
இப்போது விஷயம் என்ன வென்றால், அந்த விண்கப்பலுக்கு 36 வயது ஆகிவிட்டது, போன வருடம் தான் நமது சூரிய குடும்பத்தை கடந்து வெளியே சென்றது, தற்போது பூமியில் இருந்து அது 19,0000000 (19 million) கிலோமேட்டர்கள் தொலைவில் பயணித்து கொண்டிருக்கிறது, நமது சூரிய குடும்பத்தை தாண்டி வெளியே அடர்த்தியான 'பிளாஸ்மா' வாயுக்கள் நடுவே அது பயணித்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது, வாயுக்களின் அதிர்வுகளால் ஏற்படும் சத்தத்தை அது பதிவு செய்து ரேடியோ அலைகளாக மாற்றி பூமிக்கு அனுப்பியுள்ளது, என்ன ஆச்சர்யம் என்று கேட்கிறீர்களா ??,
எனக்கு இரண்டு ஆச்சர்யங்கள், 36 வருடங்களாக பயணம் செய்து 19 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்து அது அனுப்பிய ஒலி, வெறும் 17 மணி நேரத்தில் நமக்கு கிடைத்து விட்டது ரேடியோ அலைகள் வாயிலாக மற்றும் இத்தனை தொலைவில் கேட்கும் ஒலியை நாம் இங்கே உக்காந்து கேட்கிறோமே என்ற பிரம்மிப்பு.
இத்தனை தேடல்கள் எதற்காக என்றால் அது போற போக்கில் ஏதாவது உயிரினங்களிடம் சிக்கலாம், அங்கே நமது முப்பாட்டர்கள் யாராவது வேறொரு உருவில் உக்காந்து நண்டு வறுத்து தின்று கொண்டிருக்கலாம், நம்மை தொடர்பு கொள்ளலாம்,, அனைத்துமே சாத்தியமே!!! அந்த ஒலியை கேட்க லிங்கை கிளிக்கவும்.
Tuesday, August 6, 2019
24 hours working Medical Shops in Chennai Address & Contact No.
Friday, August 2, 2019
"தகவல் அறியும் சட்டம் 2005 ஒரு பார்வை" - Right to Information
அரசு துறைகள் மற்றும் அரசு சார்ந்தநிறுவனங்களிடம் இருந்து நமக்கு தேவையான விவரங்களை தகவல் பெரும் சட்டத்தின் கீழ்பெறுவது எப்படி? என்கிற கேள்வி பலருக்கும் பதில் தெரியவில்லை. அனைவருக்கும் பயன்அளிக்கும் வகையிலான இந்த சட்டத்தை எந்த வகையில் பயன்படுத்துவது என்பது குறித்த சில
கேள்விகளும் பதில்களும் பற்றி பார்போம்.
யார் தகவல் கேட்கலாம்? (Who can ask for information?)
எந்த ஒரு இந்திய குடிமகனும் தகவல் பெறலாம்.
யாரிடம் தகவல் பெறலாம்? (Who Can Get Information?)
அரசு நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள், அரசு உதவி பெறும் அமைப்புகள் போன்றவைகளிடம் தகவல் கேட்கலாம்.
தகவல் அளிக்க யாருக்கெல்லாம் விலக்கு?
தகவல் அளிப்பதிலிருந்து ஒரு சில அமைப்புகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் பாதுகாப்பு, இறையான்மை, ஒருமைப்பாடு, ராணுவம் சார்ந்த தொழில் நுட்பம் போன்ற தகவல்களை தகவல் பெறும் சட்டத்தின் கீழ் அளிக்க தேவையில்லை. நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட தகவல், தனி நபர் மூன்றாம் நபர் தகவல்கள், காவல் புலனாய்வு போன்ற தகவல் தெரிவிக்க வேண்டியதில்லை.
தகவல் அளிப்பவர் யார்? (Who is the informant?)
அனைத்து நரசு துறைகளும் போது தகவல் அலுவலரை நியமித்து அது குறித்த தகவல்களை பொது மக்கள் அறியும் வகையில் வெளியிடவேண்டும்.
கட்டணம் எவ்வளவு? (How much is the fee?)
தகவல் பெற கட்டணம் ரூ.10 இதை ரொக்கமாகவோ, நீதி மன்ற வில்லையகவோ ஒட்டுவதன் மூலமாகவோ, வங்கி வரைவோலை, இந்திய போஸ்டல் ஆர்டர் மூலமாகவோ செலுத்த முடியும். ரயில்வே துறையில் தகவல் பெற ரூ.10ஒவ்வொரு நிமிடத்துக்கு ரூ.5 கட்டணம் செலுத்த வேண்டும்.
கேட்க கூடிய தகவல் அதிக பக்கங்களை கொண்டதாக இருக்கும் பொது தகவல் கேட்பவர் பக்கத்துக்கு ரூ.2 செலுத்த வேண்டியிருக்கும்.
தகவல்களை சி.டி., பிளாப்பி வடிவில் நகல எடுத்தது பெறுவதற்கு ரூ.50 செலுத்த வேண்டியிருக்கும். வறுமை கோட்டிற்குகீழ் இருப்பவர்கள் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
குடும்ப அட்டை பெறுவதில் சிக்கலா? (Having trouble getting a family card?)
தகவல் அறியும் உரிமைச்சட்டம் மாதிரி கடிதம்
உங்களுக்கு குடும்ப அட்டை பெறுவதில் சிக்கலா? குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் வழிமுறை தெரியவில்லை? தகவல் பெறும் உரிமைச்சட்டம்2005ன் கீழ் உங்கள் அனைத்து சிக்கலும் தீர்வு காண முடியும். பின்வரும் மாதிரி விண்ணப்பத்தில் உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து பயன்படுத்துங்கள். சந்தேகங்களை கேட்டறியுங்கள்.
தகவல் அறியும் உரிமைச்சட்ட விண்ணப்பம்
(ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல்)
அனுப்புநர்:
தங்கள் முழு முகவரி
பெறுநர்:
பொது தகவல் அலுவலர் அவர்கள் ,
மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகம்,
................மாவட்டம்.
வணக்கம்,
பொருள்: தகவல் பெறும் உரிமை சட்டம் 2005ன் கீழ் தகவல் பெறுவது சம்பந்தமாக
1) புதிய குடும்ப அட்டை வாங்க ஒருவர் எந்த அலுவலகத்தில், யாரை அணுக வேண்டும் என்பதை தெரிவிக்கவும்.
2) குடும்ப அட்டைக்கு விண்ணபிப்பதற்கான விண்ணப்பத்தை எந்த அலுவலகத்தில், எந்த அலுவலரிடம் பெற வேண்டும்? அதற்க்கு கட்டணம் ஏதேனும் உள்ளதா? இருந்தால் அது எவளவு என்று தெரிவிக்கவும்
3) குடும்ப அட்டை பெற விண்ணபிக்கும்போது என்னென்ன ஆவணங்களை விண்ணபத்துடன் இணைக்க வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கவும்.
4) குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தால் எத்தனை நாட்களுக்குள் குடும்பத்தை வழங்கப்படும்? அரசு நிர்ணயித்துள்ள நாட்களுக்குள் வழங்கபடவில்லைஎன்றால் அதற்க்கு முழு பொறுப்பு யார் என்ற விவரத்தை தெரிவிக்கவும்.
5) குடும்ப அட்டை அச்சிடப்பட்ட அலுவலகத்திற்கு வந்திருப்பதை விண்ணப்பதாரருக்கு எவ்வாறு தெரிவிக்க படும் ( எழுத்து மூலமாகவா அல்லது வாய்மொழி மூலமாகவா) என்ற விவரம் தெரிவிக்கவும்.
6) குடும்ப அட்டை வழங்க தாமதமாக்கும் அரசு அலுவலர்கள் மீது அரசு என்னென்ன நடவடிக்கை எடுக்கும் என்ற விவரம் தெரிவிக்கவும். இது அரசின் எந்த சட்டத்தின் கீழ் வரும் என்ற விவரமும் தெரிவிக்கவும்.
7) ஒருவர் தனது குடும்ப அட்டையை தொலைத்துவிட்டால் (நகல் ஏதும் இல்லை என்றால்) புதிய குடும்பட்டை பெற எந்த அலுவலகத்தில் எந்த அலுவலகத்தில் விண்ணபிக்க வேண்டும்? அப்படி விண்ணபித்தால் எத்தனை நாட்களுக்குள் புதிய குடும்பட்டை கிடைக்கும். அது பற்றி தகவல் தரவும்.
8) ஒரு ஆண்(அ) பெண் தன்னுடைய பெயரை குடும்ப அட்டையிலுருந்து நீக்கம் செய்து பெயர் நீக்க சான்று பெற எந்த அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்? இதனோடு என்னென்ன ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்?
9) ஒருவருக்கு நியாய விலை கடையில் பொருள்கள் கிடைக்கவில்லை என்றால் எந்த அலுவலரிடம் புகார் கொடுக்க வேண்டும்? அப்புகார் மீது நடவடிக்கை எடுகாதபட்சதில் மேல் முறையீடு செய்ய வேண்டிய அலுவலர் முகவரி தெரிவிக்கவும்.
10) எடையில் குறைபாடு, தேவையற்ற பொருள்களை திணித்தல் ஆகிய புகார்களுக்கு யாரை அணுக வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கவும்.
11) நுகர்வோர் புகார் கூறியும், எந்த அலுவலரும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அந்த குறிப்பிட்ட அலுவலர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியுமா என்ற விவரம் தெரிவிக்கவும். முடியும் என்றால் எந்த பிரிவின்கீழ் வழக்கு தொடர முடியும் என்றும் தெரிவிக்கவும்.
12) எத்தனை விதமான குடும்ப அட்டைகள் தற்போது தமிழ்நாட்டில் உள்ளன. அவை வருமானத்தின் அடிப்படையில் உள்ளதா அல்லாஹ்டு மக்கள் தொகையின் அடிப்படையில் உள்ளனவா என்ற விவரம் தெரிவிக்கவும்.
நான் மேலே கூறிய தகவல்கள் தங்கள் அலுவலகத்தில் இல்லை எனில் தகவல் தொடர்புடைய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுகொள்கின்றேன். இந்த விண்ணப்பத்திற்கான கட்டணமாக 10 ரூபாய் மதிப்புள்ள நீதிமன்ற கட்டண வில்லையை ஒட்டியுள்ளேன். மேலும் தகவலுக்கு பணம் செலுத்த வேண்டியுரிப்பின், எத்தனை பக்கங்கள், அதற்க்கு பணம், எந்த தலைப்பில் செல்லுத்த வேண்டும் என்று தெரிவித்ததால், அதை நான் செலுத்த தயாராக உள்ளேன்.
இவ்வாறு தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு விண்ணப்பித்து குடும்ப
அட்டை பெறுவதற்கான தகவலை அறிந்து கொள்ளலாம்.
Monday, July 22, 2019
First Information Report - என்பது F.I.R-ன் விரிவாக்கம். தமிழில் 'முதல் தகவல் அறிக்கை'. குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீஸாரால் பதியப் படும் வழக்கு ஆவணம்.
"இந்திய தண்டனைச் சட்டத்தில், அனைத்து வகைக் குற்றங்களையும் இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கிவிடலாம். அதாவது, புகார் அளித்ததும் குற்றம்சாட்டப்பட்டவரைக் கைது செய்ய வேண்டிய குற்றங்கள், உடலில் ரத்தக் காயங்களை ஏற்படுத்தும் குற்றங்கள் மற்றும் சிறிய, பெரிய அளவிலான பண மோசடிகள் ஆகியவை உடனடி கைது நடவடிக்கை வேண்டுபவை. இவற்றுக்கு உடனடியாக F.I.R பதிய வேண்டும்.
உடலில் காயம் ஏற்படாத மன உளைச்சலை உண்டாக்கும் வகையிலான குற்றங்கள் இரண்டாவது பிரிவில் அடங்குபவை. இந்தக் குற்றங்களில் பாதிக்கப் பட்டோரின் புகாரை அந்த எல்லைக்கு உட் பட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பி, மாஜிஸ்ட்ரேட் டின் ஒப்புதல் பெற்ற பிறகுதான், F.I.R பதிவு செய்ய முடியும். சம்பவம் நடந்த இடத்தை நிர்வகிக்கும் காவல் நிலையத்தில்தான் புகார் அளிக்க வேண்டும். ஆனால், அவசர காலம் என்றால், அருகில் இருக்கும் எந்தக் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம். பொதுவாக, F.I.R பதிவு செய்யும் நபர், முதல் நிலை காவலர் அந்தஸ்துக்கு (பக்கவாட்டில் இரு வெள்ளைக் கோடு இருக் கும் காக்கி யூனிஃபார்ம் அணிந்து இருக்கும் காவலர்கள்) குறையாத நபராக இருக்க வேண்டும்.அவருக்கும் மேல் உள்ள அதிகாரி களான டி.எஸ்.பி., எஸ்.பி., என எவரிடமும் புகாரைப் பதிவு செய்யலாம். பாதிக்கப்பட்டவர் வாய்மொழி வாக்குமூலமாகக்கூட புகார் அளிக்கலாம். ஆனால், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி அந்த வாக்குமூலத்தைப் புகாராக எழுதி, புகார்தாரரின் கையப்பத்தையோ கை ரேகையையோ அதில் இடம் பெறச் செய்ய வேண்டும். பிறகு, குற்றம் நடந்து இருப்பதை உறுதிசெய்து, உடனடியாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு, இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள 511 பிரிவுகளில் புகார்தாரரின் பாதிப்புக்கு தக்க பிரிவுகளில் வழக்கினைப் பதிவுசெய்ய வேண்டும்.
ஒரு F.I.R என்பது மொத்தம் ஆறு நகல்களைக் கொண்டது. காவல் அதிகாரி எழுதும் அசல் F.I.R அந்த நோட்டிலேயே இருக்கும். அதைக் கிழிக்கக் கூடாது. கார்பன் தாள் வைத்து எழுதப்படும் மீதி ஐந்து நகல்களைத்தான் புகார் தாரர், நீதிமன்றம் என விநியோகிக்க வேண்டும். புகார்தாரருக்கு F.I.R நகல் அளிக்க வேண்டியது அவசியம். அப்படித் தராமல் இருப்பதுகூட ஒரு குற்றம்.
Friday, July 19, 2019
