Micromax Google Certified Android Smart TV- Online Sale - Flipkart
மைக்ரோமேக்ஸ் (micromax) நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் ஸ்மார்ட்போன் மற்றும் சிறந்த ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கும் சிறந்த வரவேற்பு உள்ளது.
அதன்படி மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் கூகுள் சான்று பெற்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட் டிவி மாடல்களின் விலை ரூ. 13,999/- முதல் துவங்குகிறது.
மேலும் 32 இன்ச், 40 இன்ச் மற்றும் 43 இன்ச் அளவுகளில் கிடைக்கும் ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்களில் 16:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் புதிய மைக்ரோமேக்ஸ் டிவி மாடல்களின் விற்பனை இன்று முதல் துவங்குகிறது. இவை ப்ளிப்கார்ட் (Flipkart) தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகின்றன என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மைக்ரோமேக்ஸ் ஆண்ட்ராய்டு டிவி மாடல்களில் சிறப்பம்சம் : (Special Features of New Smart of Micromax TV )
கூகுள் பிளே ஸ்டோர்,
கேம்கள்,
திரைப்படங்கள் மற்றும் இசை
உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியும். மேலும் பில்ட் இன் க்ரோம்காஸ்ட் (Chromecast) வசதியும் வழங்கப்படுகிறது. இதுதவிர கூகுள் சேவையும் இருப்பதால், பயனர்கள் தங்களின் குரல் மூலம் (Voice Search) தேடல்களை மேற்கொள்ளலாம்.
புதிய டிவி மாடல்களின் விரிவான அம்சங்களை மைக்ரோமேக்ஸ் இதுவரை அறிவிக்கவில்லை. ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்களுடன் மைக்ரோமேக்ஸ் புதிய டாப் லோடிங் வாஷிங் மெஷின் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 10,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.