Wednesday, November 22, 2023
Wednesday, March 29, 2023
இந்த பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் இருக்கிறது என்று நினைப்பது மிகப்பெரிய தவறு, பல பில்லியன் கோடி நட்சத்திரங்களில், ஒரு நட்சத்திரம் ஆன சூரியன் என நாம் பெயரிட்டு கொண்ட நெருப்பு பந்தை சுற்றி வரும் ஒரு சுமாரான கிரகத்தில் அதை விட சுமாரான அமைப்போடு சுற்றும் சுமார் மூஞ்சி குமார்கள் தான் நாம் என்பதை மறந்து விட வேண்டாம், எண்ணிலடங்கா உயிரினங்கள் இப்பிரபஞ்சம் முழுவதும் இருப்பதற்கு வாய்ப்புள்ளது, அவை நம்மை விட அறிவில் மிஞ்சியதாக இருக்கலாம், முக அமைப்பில் நம்மை விட சுமாராக இருக்கலாம்,
நிகழ்தகவு (Probability) படி கணக்கு போட்டு பார்த்தால் பூமியை மாதிரியே கிரகங்கள் அமைவதற்கும் நம்மை மாதிரி அறிவான உயிரிகள் பரிணாம் அடைவதற்கும் எச்சக் கச்ச வாய்ப்புள்ளது என்பது தான் அறிவியல் கூறுகிறது,,,
பொதுவாகவே நம் மக்களிடம் ஒரு நல்ல குணம் உண்டு அதாவது பக்கத்து வீட்டுக்காரன் வீட்ல என்ன நடக்குது? சண்ட ஏதாவது நடக்குதா இல்ல சுமூகமா போகுதா? இன்னைக்கு என்ன குழம்பு வச்சானுங்க இன்னும் வாசனையே வரலயே ? என்பது போன்ற நமது அண்டை வீட்டார்களின் மேல் கொஞ்சம் பாசம் அதிகம் தான். அமெரிக்காவிற்கு அது ரெம்பவே அதிகம், பாசம் பக்கத்து நாட்டவர்கள் வரை கூட நீளும், நாம் மட்டும் இப்படி ஏன்டா பொறந்தோம்னு நொந்துகிட்டு இருக்கோமா இல்ல நம்மள மாதிரியே யாராவது வேற்று கிரக உயிரிகள் இதே மாதிரி பீல் பண்ணிட்டு இருக்கிறார்களா என்று கண்டறிய பல முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
இதற்காகவே நாசா விஞ்ஞானிகள் 1977-இல் 'வாயேஜர்-1' என்ற ஒரு விண்கப்பலை தயார் செய்து அதில் நமது உருவம், நமது பூமியை பற்றிய சில குறிப்புகள், இசை குறிப்புகள், நமது மொழிகள் மற்றும் இன்னபிற தகவல்களை பதிவு செய்து, நமது சூரிய குடும்பத்தில் உள்ள எந்த கிரகம் மீதும் மோதாத மாதிரி பூமியில் இருந்து ஏவி விட்டனர், ஒரு முறை பூமியின் ஈர்ப்பு விசையை தாண்டி எந்த பொருளையும் வெளியே எறிந்து விட்டால் போதும் அது வேறொரு ஈர்ப்பு விசையில் ஆட்படும் வரையிலும் அதே வேகத்தில் சென்று கொண்டிருக்கும்,
இப்போது விஷயம் என்ன வென்றால், அந்த விண்கப்பலுக்கு 36 வயது ஆகிவிட்டது, போன வருடம் தான் நமது சூரிய குடும்பத்தை கடந்து வெளியே சென்றது, தற்போது பூமியில் இருந்து அது 19,0000000 (19 million) கிலோமேட்டர்கள் தொலைவில் பயணித்து கொண்டிருக்கிறது, நமது சூரிய குடும்பத்தை தாண்டி வெளியே அடர்த்தியான 'பிளாஸ்மா' வாயுக்கள் நடுவே அது பயணித்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது, வாயுக்களின் அதிர்வுகளால் ஏற்படும் சத்தத்தை அது பதிவு செய்து ரேடியோ அலைகளாக மாற்றி பூமிக்கு அனுப்பியுள்ளது, என்ன ஆச்சர்யம் என்று கேட்கிறீர்களா ??,
எனக்கு இரண்டு ஆச்சர்யங்கள், 36 வருடங்களாக பயணம் செய்து 19 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்து அது அனுப்பிய ஒலி, வெறும் 17 மணி நேரத்தில் நமக்கு கிடைத்து விட்டது ரேடியோ அலைகள் வாயிலாக மற்றும் இத்தனை தொலைவில் கேட்கும் ஒலியை நாம் இங்கே உக்காந்து கேட்கிறோமே என்ற பிரம்மிப்பு.
இத்தனை தேடல்கள் எதற்காக என்றால் அது போற போக்கில் ஏதாவது உயிரினங்களிடம் சிக்கலாம், அங்கே நமது முப்பாட்டர்கள் யாராவது வேறொரு உருவில் உக்காந்து நண்டு வறுத்து தின்று கொண்டிருக்கலாம், நம்மை தொடர்பு கொள்ளலாம்,, அனைத்துமே சாத்தியமே!!! அந்த ஒலியை கேட்க லிங்கை கிளிக்கவும்.
Tuesday, June 16, 2020
Friday, June 12, 2020
- 0- 45 கிமீ வேகத்தை எட்டுவதற்கு ( 3.9 Seconds) விநாடிகளை எடுத்துக் கொள்ளும்.
- முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறத்தில் ஷாக் அப்சார்பர் பெற்று இரு பக்க டயர்களில் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. 12 அங்குல அலாய் வீல் பெற்றதாக அமைந்துள்ளது.
- 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்ற ஆப்ஸ்கூட்டர் வை-ஃபை ப்ளூடூத் ஆதரவு, நேவிகேஷன், பாடல்கள், எஸ்.எம்.எஸ் போன்றவற்றை பெற்றிருக்கின்றது.
Monday, June 1, 2020
நீங்கள் எடையைக் குறைக்க முயற்சிக்கும்போது, காலை உணவு உங்கள் நாள் முழுவதும் தொனியை அமைக்கும். தவறான உணவுகளை உட்கொள்வது உங்கள் ஏக்கங்களை பெருக்கி, நாள் தொடங்குவதற்கு முன்பே உங்களை சோம்பேறித்தனம் ஆக்கும். உடல் எடையை குறைக்க உதவும் 14 ஆரோக்கியமான காலை உணவுகள் என்னவென்று பார்ப்போம். புரதசத்து மற்றும் செலினியம் மற்றும் ரைபோஃப்ளேவின் (riboflavin) போன்ற முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் முட்டைகள் ஊட்டச்சத்தின் உண்மையான சக்தியாகும்.
எடை இழப்புக்கு தீவிர ஊக்கத்தை அளிக்க காலை உணவோடு சாப்பிடும்போது முட்டைகள் பசியைக் குறைக்கும். எடுத்துக்காட்டாக, அதிக எடையுள்ள 30 பெண்களில் ஒரு ஆய்வில், காலை உணவுக்கு முட்டை சாப்பிடுவது
Sunday, May 31, 2020
மாதுளை (Pomegranate, Punica granatum)
மாதுளையின் பூ, பிஞ்சு,மற்றும் பழம் நிறத்திலும் வடிவத்திலும் மிகுந்த அழகு மிக்கவையாகும்.
மாதுளையின் வகைகள் :
- ஸ்பேனிஷ் ரூபி
- ஆலந்தி
- வெள்ளோடு
- காபுல்
- தோல்கா
- மஸ்கட் ரெட்
- கண்டதாரி
- பிடானா
மாதுளையின் பயன்கள் :
Thursday, August 15, 2019
ஆலிவ் எண்ணெய் ஆலிவிலிருந்து பெறப்படுகிறது மற்றும் இது மத்திய தரைக்கடல் உணவின் பிரதானமாகும். எண்ணெயை உட்கொள்ளும்போது பல ஊட்டச்சத்து நன்மைகள் உள்ளன, ஆனால் இது தோல் மற்றும் கூந்தலுக்கும் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.
தோல் மற்றும் முகத்திற்கு ஆலிவ் எண்ணெயின் நன்மைகள் :
(Benefits of olive oil for the skin)
ஆலிவ் எண்ணெய் ஒரு ஆக்ஸிஜனேற்றியாக (Antioxidant) செயல்படுகிறது, இது ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுக்கும் ஒரு பொருளாகும். ஆக்ஸிஜனேற்றம் என்பது ஃப்ரீ ரேடிக்கல்களை உருவாக்கக்கூடிய ஒரு செயல்முறையாகும், அவை உயிரணுக்களை சேதப்படுத்தும் மற்றும் புற்றுநோய் வளர்ச்சிக்கு பங்களிக்கும் ரசாயனங்கள் ஆகும்.
ஆலிவ் எண்ணெயின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மனித தோலில் ஏற்படும் பாதிப்புகளைப் புரிந்து கொள்ள விஞ்ஞானிகள் இந்த பகுதியில் மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
ஆலிவ் எண்ணெயில் கொழுப்பு-கரையக்கூடிய வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவை உள்ளன. இந்த வைட்டமின்கள் சில சருமத்திற்கு நன்மை பயக்கும்.
எடுத்துக்காட்டாக, தடிப்புத் தோல் அழற்சி மற்றும் அரிக்கும் தோலழற்சி உள்ளிட்ட பல்வேறு தோல் நிலைகளுக்கு சிகிச்சையளிக்க முழுவதும் வைட்டமின் ஈ எண்ணெயைப் பயன்படுத்தினர்.
Tuesday, August 6, 2019
24 hours working Medical Shops in Chennai Address & Contact No.
Saturday, August 3, 2019
இன்றைய உலகில் இணைய இணைப்பு (InternetConnection) மிகவும் இன்றியமையாத தேவை. நாம் அனைவரும் இணையம் பயன்படுத்தும் போது ஏற்படும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று இருக்கின்றது. அதுதான் இணைய இணைப்பு திடீர் திடீர் (suddenly) என விட்டுப் போவது, நாம் அடிக்கடி காணும் பிரச்னை இவைதான், குறிப்பாக கம்பி வழி இணைப்பு கொண்டோருக்கு இது தொடர்ந்து வரும் பயமுறுத்தலாகவே உள்ளது. இணைய இணைப்பு இல்லாமல் போவது என்பது, நமக்கு தும்மல் வருவது போல ஆகிவிட்டது. தும்மலையாவது ஒரு சில காரணங்களுக்காகக் கட்டாயம் வரும் என எதிர்பார்க்கலாம். ஆனால் இன்டர்நெட் இணைப்பு எப்போது கட் ஆகும் மீண்டும் எப்போது வரும் எனச் சொல்ல முடியாது.
பொதுவாக இது போல கட் ஆகும்போது, உடனே கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் (Restart) செய்து பார்க்கிறோம். நமக்கு இன்டர்நெட் சர்வீஸ் வசதி தரும் நிறுவனத்தைத் திட்டித் தீர்க்கிறோம். கட்டிய காசு தீர்ந்தவுடன் முதலில் இந்த நிறுவனத்தை முடித்து , வேறு ஒரு நிறுவனத்தின் சேவைக்கு மாற்றினால் தான் நிம்மதி என்கிறோம். இருப்பினும் இதுதான் உங்களது இணைப்பு தீடீரென்று தடைபடுவதற்கு காரணம் இதை ஒரு முறை செக் (Check) செய்து பார்க்க வேண்டும்.
ரீ ஸ்டார்ட் (Restart) செய்யவேண்டும். அதன் பின் கேபிள் மோடத்தினை
ரீ ஸ்டார்ட் செய்யவேண்டும்.மோடத்தில் (modem) விளக்குகள் எரிந்து டேட்டா பரிமாற்ற விளக்குகள் சிமிட்டத் (Blink) தொடங்கினால் இன்டர்நெட் இணைப்பு வந்துவிட்டது என்று அர்த்தம். அனைத்து விளக்குகளும் எரியவில்லை என்றால் உங்கள் இணைப்பிற்கான கேபிள்கள் அனைத்தும் சரியாகப் பொருத்தப்பட்டிருப்பதனை உறுதி செய்யவேண்டும்.
Friday, August 2, 2019
"தகவல் அறியும் சட்டம் 2005 ஒரு பார்வை" - Right to Information
அரசு துறைகள் மற்றும் அரசு சார்ந்தநிறுவனங்களிடம் இருந்து நமக்கு தேவையான விவரங்களை தகவல் பெரும் சட்டத்தின் கீழ்பெறுவது எப்படி? என்கிற கேள்வி பலருக்கும் பதில் தெரியவில்லை. அனைவருக்கும் பயன்அளிக்கும் வகையிலான இந்த சட்டத்தை எந்த வகையில் பயன்படுத்துவது என்பது குறித்த சில
கேள்விகளும் பதில்களும் பற்றி பார்போம்.
யார் தகவல் கேட்கலாம்? (Who can ask for information?)
எந்த ஒரு இந்திய குடிமகனும் தகவல் பெறலாம்.
யாரிடம் தகவல் பெறலாம்? (Who Can Get Information?)
அரசு நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள், அரசு உதவி பெறும் அமைப்புகள் போன்றவைகளிடம் தகவல் கேட்கலாம்.
தகவல் அளிக்க யாருக்கெல்லாம் விலக்கு?
தகவல் அளிப்பதிலிருந்து ஒரு சில அமைப்புகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் பாதுகாப்பு, இறையான்மை, ஒருமைப்பாடு, ராணுவம் சார்ந்த தொழில் நுட்பம் போன்ற தகவல்களை தகவல் பெறும் சட்டத்தின் கீழ் அளிக்க தேவையில்லை. நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட தகவல், தனி நபர் மூன்றாம் நபர் தகவல்கள், காவல் புலனாய்வு போன்ற தகவல் தெரிவிக்க வேண்டியதில்லை.
தகவல் அளிப்பவர் யார்? (Who is the informant?)
அனைத்து நரசு துறைகளும் போது தகவல் அலுவலரை நியமித்து அது குறித்த தகவல்களை பொது மக்கள் அறியும் வகையில் வெளியிடவேண்டும்.
கட்டணம் எவ்வளவு? (How much is the fee?)
தகவல் பெற கட்டணம் ரூ.10 இதை ரொக்கமாகவோ, நீதி மன்ற வில்லையகவோ ஒட்டுவதன் மூலமாகவோ, வங்கி வரைவோலை, இந்திய போஸ்டல் ஆர்டர் மூலமாகவோ செலுத்த முடியும். ரயில்வே துறையில் தகவல் பெற ரூ.10ஒவ்வொரு நிமிடத்துக்கு ரூ.5 கட்டணம் செலுத்த வேண்டும்.
கேட்க கூடிய தகவல் அதிக பக்கங்களை கொண்டதாக இருக்கும் பொது தகவல் கேட்பவர் பக்கத்துக்கு ரூ.2 செலுத்த வேண்டியிருக்கும்.
தகவல்களை சி.டி., பிளாப்பி வடிவில் நகல எடுத்தது பெறுவதற்கு ரூ.50 செலுத்த வேண்டியிருக்கும். வறுமை கோட்டிற்குகீழ் இருப்பவர்கள் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
குடும்ப அட்டை பெறுவதில் சிக்கலா? (Having trouble getting a family card?)
தகவல் அறியும் உரிமைச்சட்டம் மாதிரி கடிதம்
உங்களுக்கு குடும்ப அட்டை பெறுவதில் சிக்கலா? குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் வழிமுறை தெரியவில்லை? தகவல் பெறும் உரிமைச்சட்டம்2005ன் கீழ் உங்கள் அனைத்து சிக்கலும் தீர்வு காண முடியும். பின்வரும் மாதிரி விண்ணப்பத்தில் உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து பயன்படுத்துங்கள். சந்தேகங்களை கேட்டறியுங்கள்.
தகவல் அறியும் உரிமைச்சட்ட விண்ணப்பம்
(ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல்)
அனுப்புநர்:
தங்கள் முழு முகவரி
பெறுநர்:
பொது தகவல் அலுவலர் அவர்கள் ,
மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகம்,
................மாவட்டம்.
வணக்கம்,
பொருள்: தகவல் பெறும் உரிமை சட்டம் 2005ன் கீழ் தகவல் பெறுவது சம்பந்தமாக
1) புதிய குடும்ப அட்டை வாங்க ஒருவர் எந்த அலுவலகத்தில், யாரை அணுக வேண்டும் என்பதை தெரிவிக்கவும்.
2) குடும்ப அட்டைக்கு விண்ணபிப்பதற்கான விண்ணப்பத்தை எந்த அலுவலகத்தில், எந்த அலுவலரிடம் பெற வேண்டும்? அதற்க்கு கட்டணம் ஏதேனும் உள்ளதா? இருந்தால் அது எவளவு என்று தெரிவிக்கவும்
3) குடும்ப அட்டை பெற விண்ணபிக்கும்போது என்னென்ன ஆவணங்களை விண்ணபத்துடன் இணைக்க வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கவும்.
4) குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தால் எத்தனை நாட்களுக்குள் குடும்பத்தை வழங்கப்படும்? அரசு நிர்ணயித்துள்ள நாட்களுக்குள் வழங்கபடவில்லைஎன்றால் அதற்க்கு முழு பொறுப்பு யார் என்ற விவரத்தை தெரிவிக்கவும்.
5) குடும்ப அட்டை அச்சிடப்பட்ட அலுவலகத்திற்கு வந்திருப்பதை விண்ணப்பதாரருக்கு எவ்வாறு தெரிவிக்க படும் ( எழுத்து மூலமாகவா அல்லது வாய்மொழி மூலமாகவா) என்ற விவரம் தெரிவிக்கவும்.
6) குடும்ப அட்டை வழங்க தாமதமாக்கும் அரசு அலுவலர்கள் மீது அரசு என்னென்ன நடவடிக்கை எடுக்கும் என்ற விவரம் தெரிவிக்கவும். இது அரசின் எந்த சட்டத்தின் கீழ் வரும் என்ற விவரமும் தெரிவிக்கவும்.
7) ஒருவர் தனது குடும்ப அட்டையை தொலைத்துவிட்டால் (நகல் ஏதும் இல்லை என்றால்) புதிய குடும்பட்டை பெற எந்த அலுவலகத்தில் எந்த அலுவலகத்தில் விண்ணபிக்க வேண்டும்? அப்படி விண்ணபித்தால் எத்தனை நாட்களுக்குள் புதிய குடும்பட்டை கிடைக்கும். அது பற்றி தகவல் தரவும்.
8) ஒரு ஆண்(அ) பெண் தன்னுடைய பெயரை குடும்ப அட்டையிலுருந்து நீக்கம் செய்து பெயர் நீக்க சான்று பெற எந்த அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்? இதனோடு என்னென்ன ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்?
9) ஒருவருக்கு நியாய விலை கடையில் பொருள்கள் கிடைக்கவில்லை என்றால் எந்த அலுவலரிடம் புகார் கொடுக்க வேண்டும்? அப்புகார் மீது நடவடிக்கை எடுகாதபட்சதில் மேல் முறையீடு செய்ய வேண்டிய அலுவலர் முகவரி தெரிவிக்கவும்.
10) எடையில் குறைபாடு, தேவையற்ற பொருள்களை திணித்தல் ஆகிய புகார்களுக்கு யாரை அணுக வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கவும்.
11) நுகர்வோர் புகார் கூறியும், எந்த அலுவலரும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அந்த குறிப்பிட்ட அலுவலர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியுமா என்ற விவரம் தெரிவிக்கவும். முடியும் என்றால் எந்த பிரிவின்கீழ் வழக்கு தொடர முடியும் என்றும் தெரிவிக்கவும்.
12) எத்தனை விதமான குடும்ப அட்டைகள் தற்போது தமிழ்நாட்டில் உள்ளன. அவை வருமானத்தின் அடிப்படையில் உள்ளதா அல்லாஹ்டு மக்கள் தொகையின் அடிப்படையில் உள்ளனவா என்ற விவரம் தெரிவிக்கவும்.
நான் மேலே கூறிய தகவல்கள் தங்கள் அலுவலகத்தில் இல்லை எனில் தகவல் தொடர்புடைய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுகொள்கின்றேன். இந்த விண்ணப்பத்திற்கான கட்டணமாக 10 ரூபாய் மதிப்புள்ள நீதிமன்ற கட்டண வில்லையை ஒட்டியுள்ளேன். மேலும் தகவலுக்கு பணம் செலுத்த வேண்டியுரிப்பின், எத்தனை பக்கங்கள், அதற்க்கு பணம், எந்த தலைப்பில் செல்லுத்த வேண்டும் என்று தெரிவித்ததால், அதை நான் செலுத்த தயாராக உள்ளேன்.
இவ்வாறு தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு விண்ணப்பித்து குடும்ப
அட்டை பெறுவதற்கான தகவலை அறிந்து கொள்ளலாம்.
Thursday, August 1, 2019
- 1 - கப் உளுத்தம் பருப்பு
- ½ - டீஸ்பூன் சீரகம்
- ½ - டீஸ்பூன் கருப்பு மிளகு
- பச்சை மிளகாய் நறுக்கியது
- ½ - டீஸ்பூன் பெருங்காயம் தூள்
- தேவைக்கேற்ப உப்பு
- 2-3 டீஸ்பூன் நீர்
- தேவைக்கேற்ப எண்ணெய் பொறிக்க