New Trend Tamil

Browse all latest informations

Saturday, August 3, 2019

கம்ப்யூட்டரில் இன்டர்நெட் கட் ஆகிவிட்டால் சரி செய்யும் முறை !!! (how to Troubleshooting Internet conncetion)

how to Troubleshooting  Internet conncetion







இன்றைய உலகில் இணைய இணைப்பு (InternetConnection)  மிகவும்  இன்றியமையாத  தேவை. நாம் அனைவரும் இணையம் பயன்படுத்தும் போது  ஏற்படும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று இருக்கின்றது. அதுதான் இணைய இணைப்பு திடீர் திடீர் (suddenly) என விட்டுப் போவது, நாம் அடிக்கடி  காணும்   பிரச்னை இவைதான், குறிப்பாக கம்பி வழி இணைப்பு கொண்டோருக்கு இது தொடர்ந்து வரும் பயமுறுத்தலாகவே உள்ளது. இணைய இணைப்பு இல்லாமல் போவது என்பது, நமக்கு தும்மல் வருவது போல ஆகிவிட்டது. தும்மலையாவது ஒரு சில காரணங்களுக்காகக் கட்டாயம் வரும் என எதிர்பார்க்கலாம். ஆனால் இன்டர்நெட் இணைப்பு எப்போது கட் ஆகும் மீண்டும் எப்போது வரும் எனச் சொல்ல முடியாது. 



பொதுவாக இது போல கட் ஆகும்போது, உடனே கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் (Restart) செய்து பார்க்கிறோம்.  நமக்கு இன்டர்நெட் சர்வீஸ் வசதி தரும் நிறுவனத்தைத் திட்டித் தீர்க்கிறோம். கட்டிய காசு தீர்ந்தவுடன் முதலில் இந்த நிறுவனத்தை முடித்து , வேறு ஒரு நிறுவனத்தின் சேவைக்கு மாற்றினால் தான் நிம்மதி என்கிறோம். இருப்பினும் இதுதான் உங்களது இணைப்பு தீடீரென்று தடைபடுவதற்கு காரணம்  இதை ஒரு முறை செக் (Check) செய்து பார்க்க வேண்டும்.

இன்டர்நெட் பிரச்சனைக்கு தீர்வு வேறு எதனையும் செய்வதற்கு முன்னால், உங்கள் மோடத்தினை (internet Modem) மீண்டும் ரீபூட் (Reboot) செய்திடுங்கள். ஒன்றுமில்லை, அதற்கு வரும் மின்சக்தியை நிறுத்தி சில நொடிகள் கழித்து மீண்டும் ஆன் செய்திடுங்கள். பின் உங்கள் ரௌட்டரை (Router) ஆன் (power on) செய்ய வேண்டும்.

உங்களுக்கு ரௌட்டர் வழி இணைப்பு இல்லை என்றால் கம்ப்யூட்டரை 
ரீ ஸ்டார்ட் (Restart) செய்யவேண்டும். அதன் பின் கேபிள் மோடத்தினை 
ரீ ஸ்டார்ட் செய்யவேண்டும்.மோடத்தில் (modem) விளக்குகள் எரிந்து டேட்டா பரிமாற்ற விளக்குகள் சிமிட்டத் (Blink) தொடங்கினால் இன்டர்நெட் இணைப்பு வந்துவிட்டது என்று அர்த்தம். அனைத்து விளக்குகளும் எரியவில்லை என்றால் உங்கள் இணைப்பிற்கான கேபிள்கள் அனைத்தும் சரியாகப் பொருத்தப்பட்டிருப்பதனை உறுதி செய்யவேண்டும்.

அதன் பின் உங்களுக்கு இணைப்பு தந்துள்ள நிறுவனத்தின் (Internet Service Provider) கஸ்டமர் சர்வீஸ் எண்ணுக்கு போன் செய்யவேண்டும்.  அதற்கு முன் அவரிடம், எது போன்ற குறை என்று சொல்ல வேண்டும் என்பதனைத் தீர்மானித்து வைத்துக் கொள்ளுங்கள் அப்போது தான் உங்களால் எளிதாக அவரிடம் பேச முடியும்.