New Trend Tamil

Browse all latest informations

Tuesday, June 16, 2020

மெமரி கார்ட் பற்றிய சிறப்பியல்புகள் !!! (Memory card characteristics of it)

நினைவக அட்டை:
(Memory card ) 

 SDகார்டு மற்றும் நினைவகஅட்டை (MemoryCards) என்று அதை நாம் கூறுகிறோம் , வெளிப்புற சேமிப்பு நினைவு பெட்டகம் (External Storage Memory Box ) , நம்முடைய மொபைல்களில் இன்று வரை நாம்  பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம் .இந்த SD card என்பதன் பொருள் Secure Digital ஆகும் .















மெமரி கார்டுகளின் வகைகள் :

இந்த நினைவக அட்டைகள் முக்கியமாக மூன்று பிரிவுகளாக பிரிக்கபடுகிறது SD, SDHC, SDXC என்பவை தான்  இதில் முக்கிய மூன்று வகையாக உள்ளது.

SD card:

உங்கள் மொபைலில் உபயோகிக்கும் சாதாரண குறைவான சேமிப்பு திறன் கொண்ட சேமிப்பு பெட்டகங்களை உள்ளடக்கியது . இதனுடைய அளவு  என்பது  128 MB இல்  இருந்து 2 GB வரை தான் இந்தவகை மெமரிகார்டுகள் இருக்கும். இந்த மெமரி கார்டு உடைய திறன் மிகவும்  குறைவான அளவில் இருக்கும்.

 SDHC :

 SD card க்கு அடுத்து சற்று மேம்படுத்த பட்ட வகையில், உள்ளதுதான்  SDHC,
 இதனுடைய அளவு  என்பது  4GB  இல்  இருந்து 32 GB வரை தான் இந்தவகை மெமரிகார்டுகள்  இருக்கும். இந்தவகை கார்டுகளில் ஒரு பிரத்தேயேக குறியீடு அச்சிடப்பட்டு இருக்கும். Class Rating மற்றும் Speed என்று ஒரு சிறிய வட்டம் மூலம் இவை குறிக்கப்பட்டு இருக்கும் .



இவற்றில்  
CLASS- 2,
CLASS- 4,
CLASS- 6  மற்றும் 
CLASS -10 

என்கிற 4 வகை CLASS ஸ்பீட்கள் உள்ளது. இந்த CLASS கார்டுகள் அனைத்துமே உங்கள் மொபைலுக்கு Data Transfer ஆக கூடிய வேகத்தை குறிக்கும் குறியீடுகள். எடுத்துக்காட்டாக உங்கள் மொபைலில் 400 MB கொண்ட வீடியோ பைலை நீங்கள் ஏற்ற வேண்டும் எனில், நீங்கள் பயன்படுத்தும் கார்டு ஆனது CLASS -10 மெமரி கார்டாக இருந்தால், ஒரு செகண்டிற்கு  10 MB பைலை உங்கள் மொபைலுக்கு பரிமாற்றம் செய்யும்.



UHS அதாவது Ultra High Speed மெமரி கார்டு அறிமுகப்படுத்த பட்டது. இதன் குறியீடு U  என்று போடப்பட்டு இருக்கும். இதில் மேலும் Phase 1 மற்றும் Phase 3 என்று பிரிக்கப்பட்டது. Phase 1 ஆனது 50 MB Per Sec (ஒரு நொடிக்கு) இல் இருந்து 100 MB வரை Transfer  செய்யும். Phase 2 ஆனது  
300 MB Per Sec (ஒரு நொடிக்கு) வரை Transfer செய்யும்.

கடைசியாக SDXC கார்டு வகைகள் 64Gb இல் இருந்து 2TB அதாவது 2000 GB  வரையிலான மெமரி கார்டுகளை கொண்டு உள்ளது.  
இந்த மெமரி கார்டுகளிலும் முன்பு சொன்ன அனைத்து  CLASS ஸ்பீட்களிலும் இருக்கிறது .



அதிக திறன் உடைய மொபைலில் குறைந்த  திறன் மெமரி கார்டு பயன்படுத்தும் பொழுது உங்களுக்கு வீடியோ திறக்கப்படும் நேரம், அது Play ஆகின்ற டைம் மற்றும் Performance ஆகியவை சரியான முறையில் இருக்காது. Up to 8 GB சப்போர்ட் என்று ஒரு மொபைலில் கொடுக்கப்பட்டு இருந்தால்,அந்த அளவு வரைக்கும் தான் உங்கள் மொபைல் எந்த தடை இல்லாமல்  நன்றாக இயங்கும் என்று அர்த்தம். மேலும் அதற்கு மேல் பயன்படுத்தும் பொழுது மொபைல் சரியாக அந்த மெமரி கார்டு  இயங்காது என்பதை வைத்து தெரிந்து கொள்ளவேண்டும்.