New Trend Tamil

Browse all latest informations

Wednesday, March 29, 2023

இந்த பூமியில் மட்டும் தான் உயிரினங்களா!!

 



இந்த பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் இருக்கிறது என்று நினைப்பது மிகப்பெரிய தவறு, பல பில்லியன் கோடி நட்சத்திரங்களில், ஒரு நட்சத்திரம் ஆன சூரியன் என நாம் பெயரிட்டு கொண்ட நெருப்பு பந்தை சுற்றி வரும் ஒரு சுமாரான கிரகத்தில் அதை விட சுமாரான அமைப்போடு சுற்றும் சுமார் மூஞ்சி குமார்கள் தான் நாம் என்பதை மறந்து விட வேண்டாம், எண்ணிலடங்கா உயிரினங்கள் இப்பிரபஞ்சம் முழுவதும் இருப்பதற்கு வாய்ப்புள்ளது, அவை நம்மை விட அறிவில் மிஞ்சியதாக இருக்கலாம், முக அமைப்பில் நம்மை விட சுமாராக இருக்கலாம்,

நிகழ்தகவு (Probability) படி கணக்கு போட்டு பார்த்தால் பூமியை மாதிரியே கிரகங்கள் அமைவதற்கும் நம்மை மாதிரி அறிவான உயிரிகள் பரிணாம் அடைவதற்கும் எச்சக் கச்ச வாய்ப்புள்ளது என்பது தான் அறிவியல் கூறுகிறது,,,

பொதுவாகவே நம் மக்களிடம் ஒரு நல்ல குணம் உண்டு அதாவது பக்கத்து வீட்டுக்காரன் வீட்ல என்ன நடக்குது? சண்ட ஏதாவது நடக்குதா இல்ல சுமூகமா போகுதா? இன்னைக்கு என்ன குழம்பு வச்சானுங்க இன்னும் வாசனையே வரலயே ? என்பது போன்ற நமது அண்டை வீட்டார்களின் மேல் கொஞ்சம் பாசம் அதிகம் தான். அமெரிக்காவிற்கு அது ரெம்பவே அதிகம், பாசம் பக்கத்து நாட்டவர்கள் வரை கூட நீளும், நாம் மட்டும் இப்படி ஏன்டா பொறந்தோம்னு நொந்துகிட்டு இருக்கோமா இல்ல நம்மள மாதிரியே யாராவது வேற்று கிரக உயிரிகள் இதே மாதிரி பீல் பண்ணிட்டு இருக்கிறார்களா என்று கண்டறிய பல முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன.


இதற்காகவே நாசா விஞ்ஞானிகள் 1977-இல் 'வாயேஜர்-1' என்ற ஒரு விண்கப்பலை தயார் செய்து அதில் நமது உருவம், நமது பூமியை பற்றிய சில குறிப்புகள், இசை குறிப்புகள், நமது மொழிகள் மற்றும் இன்னபிற தகவல்களை பதிவு செய்து, நமது சூரிய குடும்பத்தில் உள்ள எந்த கிரகம் மீதும் மோதாத மாதிரி பூமியில் இருந்து ஏவி விட்டனர், ஒரு முறை பூமியின் ஈர்ப்பு விசையை தாண்டி எந்த பொருளையும் வெளியே எறிந்து விட்டால் போதும் அது வேறொரு ஈர்ப்பு விசையில் ஆட்படும் வரையிலும் அதே வேகத்தில் சென்று கொண்டிருக்கும்,


இப்போது விஷயம் என்ன வென்றால், அந்த விண்கப்பலுக்கு 36 வயது ஆகிவிட்டது, போன வருடம் தான் நமது சூரிய குடும்பத்தை கடந்து வெளியே சென்றது, தற்போது பூமியில் இருந்து அது 19,0000000 (19 million) கிலோமேட்டர்கள் தொலைவில் பயணித்து கொண்டிருக்கிறது, நமது சூரிய குடும்பத்தை தாண்டி வெளியே அடர்த்தியான 'பிளாஸ்மா' வாயுக்கள் நடுவே அது பயணித்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது, வாயுக்களின் அதிர்வுகளால் ஏற்படும் சத்தத்தை அது பதிவு செய்து ரேடியோ அலைகளாக மாற்றி பூமிக்கு அனுப்பியுள்ளது, என்ன ஆச்சர்யம் என்று கேட்கிறீர்களா ??,


எனக்கு இரண்டு ஆச்சர்யங்கள்,  36 வருடங்களாக பயணம் செய்து 19 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்து அது அனுப்பிய ஒலி, வெறும் 17 மணி நேரத்தில் நமக்கு கிடைத்து விட்டது ரேடியோ அலைகள் வாயிலாக மற்றும் இத்தனை தொலைவில் கேட்கும் ஒலியை நாம் இங்கே உக்காந்து கேட்கிறோமே என்ற பிரம்மிப்பு.

இத்தனை தேடல்கள் எதற்காக என்றால் அது போற போக்கில் ஏதாவது உயிரினங்களிடம் சிக்கலாம், அங்கே நமது முப்பாட்டர்கள் யாராவது வேறொரு உருவில் உக்காந்து நண்டு வறுத்து தின்று கொண்டிருக்கலாம், நம்மை தொடர்பு கொள்ளலாம்,, அனைத்துமே சாத்தியமே!!! அந்த ஒலியை கேட்க லிங்கை கிளிக்கவும்.

http://www.youtube.com/watch?v=LIAZWb9_si4