மாதுளை (Pomegranate, Punica granatum)
மாதுளையின் பூ, பிஞ்சு,மற்றும் பழம் நிறத்திலும் வடிவத்திலும் மிகுந்த அழகு மிக்கவையாகும்.
மாதுளையின் வகைகள் :
- ஸ்பேனிஷ் ரூபி
- ஆலந்தி
- வெள்ளோடு
- காபுல்
- தோல்கா
- மஸ்கட் ரெட்
- கண்டதாரி
- பிடானா
வெப்ப இடைவெப்ப வலயத்திற்குரிய ஒரு பழமரமாகும். மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.
பயன்படுத்தப்படும் பகுதி :
இத்தாவரதின் இலைகல், பட்டை, மலர், கனி மற்றும விதை மருத்துவகுனம் வாய்ந்தவை
மாதுளையின் பயன்கள் :
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.[சான்று தேவை]
மாதுளை மரத்தின் பட்டைகளிலும் வோ்களிலும் "Pyridine" வகுப்பைச் சார்ந்த ஆல்கலாய்டுகள் "Pelletierine" மற்றும் "Iso Pelletierine" உள்ளன. "Tanin" என்னும் மருந்துச் சாரத்துடன் மரப்பட்டைகளிலுள்ள"Pelletierine Tannate" என்னும் சத்துப்பொருள் தான் புழுக் கொல்லி செய்கையை நிலை நிறுத்த செய்கிறது.
மாதுளம் பழ விதையில் "Punicic Acid" என்னும் அமிலம் உள்ளது. இது ஒரு நுண் கிருமி கொல்லியாகும்.அதனால் தான் நுண்கிருமிகளால் உண்டாகும் மலட்டு பிரச்சனைக்கு இது மருந்தாகிறது.
மாதுளம் பிஞ்சு:
பிஞ்சைக் காயவைத்துப் பொடிசெய்து ஏலக்காய் தூள், கசகசாத் தூள், குங்கிலியத்தூள் ஒரு கிராம் அளவாகச் சேர்த்து தினம் இரு வேளை கொடுத்தால் சீதக் கழிச்சல் குணமாகும். பூவின் சாறும் அறுகம்புல்லின் சாறும் ஓரளவு சேர்த்துக் கொடுக்க மூக்கில் இருந்து குருதி வடிவது நிற்கும்.
இலைகள் :
இலைகள் அரைத்து பசையாக்கி , கன்நோய் தீர பயன்படுத்தலாம். இலைசாவி வயிற்றுப்போக்கை தீர்க்க பயன்படுத்தலாம்.
மாதுளைக்கு தமிழில் தாடிமம், பீசபுரம், மாதுளங்கம், மாதுளம் , கழுமுள் என பெயா்கள் உண்டு. மாதுளைக்கு ஆங்கிலத்தில் பொமிகிரேனட் என்ற பெயரும் பியுனிகா கிரனேட்டம் என்ற தாவரப் பெயரும் உண்டு.