இரு துறவிகள் ஒரு ஆற்றங்கரையைக் கடப்பதற்காக சென்று கொண்டிருந்தார்கள்.
ஒரு இளம்பெண்ணோ கரையைக் கடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். துறவிகளிடம் தன்னை மறுகரை கொண்டு சேர்க்க முடியுமா? என்று கேட்டாள். ஒரு துறவியோ தயங்கினார். மற்றவரோ, அந்தபெண்ணை தன் தோள் மீது ஏற்றி வைத்துக் கொண்டு ஆற்றைக் கடக்கத் துவங்கிவிட்டார்.
மறுகரையில் சேர்த்ததும் அந்த இளம்பெண் துறவிக்கு நன்றி செலுத்திவிட்டு சென்று விட்டாள்.
துறவிகள் பயணத்தைத் தொடர்ந்தனர். சிறிது நேரம் கழித்து துறவி கேட்டார்: “நம் மதக் கோட்பாடுகளின் படி நாம் எந்த பெண்ணுடனும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது அல்லவா? நீங்கள் ஏன் அந்த பெண்ணை கொண்டு வந்து கரையில் விட்டீர்? “என்றார். இரண்டாம் துறவி சொன்னார்: ”நான் அப்பெண்ணை அக்கரையிலேயே இறக்கி விட்டு விட்டேன். நீங்கள் தான் இன்னும் தொடர்பில் இருக்கிறீர்கள்” என்றார்.